மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 செப் 2018

நெல்லையில் நிலைகொள்ளுமா சீமராஜா?

நெல்லையில் நிலைகொள்ளுமா சீமராஜா?

சிவகார்த்தி மார்கெட்: களநிலவரம் ஒரு அலசல் - 3

திரைப்பட விநியோகத்தில் குறைவான விலை கொண்ட ஏரியா TK என குறிப்பிடப்படுவது நெல்லை, கன்னியாகுமரி பகுதி. திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, கோவில்பட்டியில் உள்ள திரையரங்குகளின் வசூலைப் பிரதானமாகக் கொண்டது இப்பகுதி. இங்கு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் இருந்தாலும் அது மதுரையைப் போன்று சிலரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. புதிய விநியோகஸ்தர்களை தொடக்கத்திலேயே மட்டம் தட்டி விடுவார்கள் சீனியர் விநியோகஸ்தர்கள். அதையும் கடந்து இங்கு திரையரங்கு உரிமையாளர்கள் சினிமாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.

சீமராஜா நெல்லை ஏரியா விநியோக உரிமை 1.75 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. இங்கு தியேட்டர்களில் எம்.ஜி கேட்கவும் முடியாது வாங்கவும் இயலாது. திரையரங்குகள் இடையே அப்படியொரு ஒற்றுமை நிலவுகிறது. அவுட்ரேட் அடிப்படையில் படம் வாங்கும் விநியோகஸ்தர் தன் சொந்த முதலீட்டைச் செய்ய வேண்டிய நிர்பந்தம் TK ஏரியாவில் உள்ளது. அதிக விலை கொடுத்து படங்களை வாங்கி படம் வெற்றி பெறாததால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் இங்கு அதிகம்.

முன்னணி நடிகர்கள் நடித்த படங்களுக்கு மட்டும் இங்கு தியேட்டர் அட்வான்ஸ் கிடைக்கும். பிற படங்களை தயாரிப்பாளர்கள் தங்கள் சொந்த செலவில் ரிலீஸ் செய்து வருகின்றனர்

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான கடைசி (ரெமோ, வேலைக்காரன்) இரு படங்களும் தோல்வி படங்கள் என கூற முடியாது. அதிகமான விலை கொடுத்து வாங்கியதால் அசல் தேறவில்லை.

சீமராஜா படத்திற்கு அதிகபட்ச விலை கொடுக்கப்பட்டுள்ளது. 1.75 கோடி ரூபாய் அசல் கிடைக்க வேண்டும் எனில் 2.50 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆக வேண்டும்.

சீமராஜா நெல்லை பூமியில் நிலை கொள்வாரா என்பதையறிய செப்டம்பர் 13 வரை காத்திருப்போம்.

திருச்சியில் சீமராஜா எப்படி? நாளை இரவு 7 மணி பதிப்பில்..

சிவகார்த்தி மார்கெட்: கள நிலவரம் என்ன?

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

ஞாயிறு 9 செப் 2018