மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

படிக்கட்டில் பயணம் செய்தால் ரயில்வே பாஸ் ரத்து!

படிக்கட்டில் பயணம் செய்தால் ரயில்வே பாஸ் ரத்து!

ரயில்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தால் ரயில்வே பாஸ் ரத்து செய்யப்படும் என கோட்ட ரயில் பாதுகாப்புப் படை ஆணையர் லூயிஸ் அமுதன் எச்சரித்துள்ளார்.

சென்னை பரங்கிமலையில் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். ரயில் பாதுகாப்புப் படை ஆணையர் லூயிஸ் அமுதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த ரயில்வே ஊழியர்கள், ரயில் பயணிகளிடம் ஆணையர் விசாரணையை தொடங்கினர்.

இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லூயிஸ் அமுதன் “பரங்கிமலை ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்தது தொடர்பான தகவல்களையும், கருத்துக்களையும் விசாரணை ஆணையத்தில் தெரிவிக்கலாம்.

படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்ய வேண்டாம் என 700 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இருந்தபோதும், பரங்கிமலையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து 5பேர் உயிரிழந்தது எதிர்பாராமல் நடந்த சம்பவம். இனி ரயில்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தால் ரயில்வே பாஸை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களை வீடியோ எடுத்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

திங்கள் 30 ஜூலை 2018