மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

சகோதரரின் நலன்: நீதிபதிகள் கண்டிப்பு!

சகோதரரின் நலன்: நீதிபதிகள் கண்டிப்பு!

பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கு தொடர்பாக தயாநிதி மாறன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, வழக்கை எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை சென்னை சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு ஜூலை 25 ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, “ காவல் துறையின் அறிக்கைகள் மற்றும் ஆவணங்களைக் கருத்தில் கொள்ளும்போது, குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் குற்றம் செய்திருக்கலாம் என்று கருதுவதற்கு அடிப்படைகள் உள்ளன” என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

“பாதுகாப்புத் துறை அமைச்சர் தனது பயணத்தின்போது பிரத்தியேக விமானப்படை விமானத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே அமைச்சர் தனது பயணத்தின்போது பிரத்தியேக சொகுசு பயண ஊர்தியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட நிலையில், தொலைத்தொடர்பு அமைச்சரும் ஒரு பிரத்தியேக தொலைபேசி இணைப்பகம் வைத்திருக்கலாம்” என்று தயாநிதி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

இதற்கு நீதிபதி ஜெயச்சந்திரன், “சட்டம் அனுமதித்தால் வைத்துக்கொள்ளலாம். சட்டம் அனுமதிக்கவில்லை என்றால், அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். குற்றம் சாட்டப்பட்டவர் அத்தகைய வசதிகளை அனுபவிப்பதற்குச் சட்டம் அனுமதிக்கவில்லை என்பது இந்த விவகாரத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்களை விசாரணைக்கு உட்படுத்தலாம்” என்று தெரிவித்ததோடு, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்தது செல்லாது. வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

முதலில் தயாநிதி மாறனின் மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பானுமதி மற்றும் நவின் சின்ஹா அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்தது.

அப்போது உயர் நீதிமன்றம் ஏன் இந்த வழக்கில் தலையிட்டது என்று நீதிபதி ரஞ்சன் கோகோய் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் விகாஸ் சிங், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டிருக்க கூடாது என தானும் கருதுவதாகக் கூறினார்.

அப்போது நீதிபதி கோகோய், “குற்றம் சாட்டப்பட்டவர் அப்போது தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தார் என்பதால்தான் உயர் நீதிமன்றம் தலையிட்டுள்ளது .உங்கள்(தயாநிதி மாறன்) சகோதரரின் வணிக நலனுக்காக நீங்கள் தொலைபேசி இணைப்பைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. எனவே, விசாரணையை எதிர்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார்.

அப்போது, தான் தயாநிதி மாறனுக்காக ஆஜராகவில்லை ஏனைய குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரானதாக விகாஸ் சிங் தெரிவித்தார்.

நீங்கள் ஏன் வரிசையில் குறுக்கிடுகிறீர்கள். நாம் முதல் வழக்கில் இருக்கிறோம். இது தயாநிதி மாறன் தொடர்பானது என்று கோகோய் குறிப்பிட்டார்.

அப்போது மூத்த வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி, தயாநிதி தரப்பில் தான் வாதிடவுள்ளதாக விளக்கமளித்தார்.

அப்போது கோகோய், “திரு சிங்வி. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நீங்கள் விசாரணையை எதிர்கொள்ளுங்கள். இது விசாரணைக்கு உட்பட்டது” என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

திங்கள் 30 ஜூலை 2018