மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அனுமதி பெறப்பட்டதா?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அனுமதி பெறப்பட்டதா?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உரிய அனுமதி பெற்று நடத்தப்பட்டதா, இல்லை துப்பாக்கிச் சூடு நடந்த பிறகு அனுமதி பெறப்பட்டதா என அடுக்கடுக்கான கேள்விகளை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.

கடந்த மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, 13க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்தது.

மதுரையைச் சேர்ந்த ஜான்வின்சென்ட் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தையும், அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உரிய அனுமதி பெற்ற பிறகு நடந்ததா, இல்லை, துப்பாக்கிச் சூடு நடந்த பிறகு அனுமதி பெறப்பட்டதா, எழுத்துபூர்வமாக அனுமதி பெறப்பட்டதா அல்லது வாய்மொழியாக அனுமதி பெறப்பட்டதா என்றும் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், தூத்துக்குடியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு குறித்த அறிவிப்பு பொதுமக்களை சென்றடையும் வகையில் சரியான முறையில் விளம்பரப்படுத்தப்பட்டதா என்றும் நீதிபதிகள் அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டனர்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 30 ஜூலை 2018