மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

சிறையில் பிறந்தநாள் கொண்டாடிய கைதி!

சிறையில் பிறந்தநாள் கொண்டாடிய கைதி!

விசாரணை கைதி ஒருவர் சிறையில் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொலை குற்றத்திற்காக விசாரணை கைதியாக ஷிவேந்திரா சிங் என்பவர் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அதிக பாதுகாப்பு நிறைந்ததாக கருதப்படும் ஃபைசாபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்தவாரம், அறைக்கு வெளியே வந்து ஷிவேந்திரா சிங் சிறை அதிகாரி முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 1.13 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சியை சிறை அதிகாரி ஒருவர்தான் எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்கில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூலை 28ஆம் தேதி விசாரணைக்காக ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட ஷிவேந்தர் சிங்கிடம் சிறையில் பிறந்தநாள் கொண்டாடியது பற்றி கேட்டதற்கு, சிறை அதிகாரி வினய்குமாருக்கு ரூ.1 லட்சம் கொடுத்துள்ளேன். சிறைக்கும் மொபைல்போன் பயன்படுத்துவது உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர பணம் கொடுத்துள்ளேன்’ என்றார். இதைக் கேட்டு நீதிபதியும், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் பாக்தாத் சிறையில் கைதி முன்னா பஜ்ரங்கி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. உத்தரப் பிரதேசத்தை பொருத்த வரை இதுபோன்ற பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

திங்கள் 30 ஜூலை 2018