மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

நயன்தாரா பட புரொமோஷனில் அனிருத்

நயன்தாரா பட புரொமோஷனில் அனிருத்

கோலமாவு கோகிலா படத்தின் ‘திட்டம் போட தெரியல’ என்ற பாடலின் டீசரை அனிருத் வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா பிரதான வேடம் ஏற்று நடித்துள்ள கோலமாவு கோகிலா திரைப்படம் ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. அறிமுக இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கும் இத்திரைப்படம் கோல மாவுக்கும் போதைப்பொருளுக்குமான குழப்பத்தில் ஒரு குடும்பமே சிக்கி பின் மீள்வதை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ளது. காமெடி, சேஸிங் கலந்து படம் உருவாகியுள்ள படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஜேக்குலின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் ஆறு பாடல்கள் படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளன. அதில் திட்டம் போட தெரியல என்ற பாடலின் டீசரை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“திட்டம் போட தெரியல, பயப்பட பிடிக்கல

தீயின்னு தெரிஞ்சும் தள்ளிப் போக முடியல

வேற வழி தெரியல, நல்ல வழி கிடைக்கல

அவளுக்கு ஒண்ணு நான் தான்

தப்பும் தப்பில்ல”

என இந்த பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். ஏற்கனவே வெளியான ஜிப்ரிஷ் மொழியில் உருவாகியுள்ள பாடலின் வீடியோவில் பிஜிலி ரமேஷ், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த டீசரில் அனிருத் நடித்துள்ளார்.

இசையமைப்பாளர்கள் ஒவ்வொருவராக நடிகராக அறிமுகமாகிக்கொண்டிருக்கும் நிலையில் அனிருத் அவ்வப்போது பாடல்களில் மட்டும் தலைகாட்டி வருகிறார். ஆக்ரோஷமாக கையில் கிடைக்கும் பொருள்களை அடித்து நொறுக்கும் விதமாக டீசரில் உள்ள காட்சிகள் உருவாகியுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

திங்கள் 30 ஜூலை 2018