மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

சிதம்பரம் குடும்பத்தார் ஆஜராக உத்தரவு!

சிதம்பரம் குடும்பத்தார் ஆஜராக உத்தரவு!

வெளிநாடுகளில் சொத்து வாங்கியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ப.சிதம்பரத்தின் குடும்பத்தார் ஆகஸ்ட் 20ஆம் தேதி நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள கேம்பிரிஜில் சொத்துகள் வாங்கியதாகவும், அமெரிக்காவில் இரு நிறுவனங்களில் கணக்கில் காட்டாமல் முதலீடு செய்ததை மறைத்தாக கூறி, சொத்துகளின் விவரங்கள் வாங்கியதற்கான வருவாய் ஆதாரங்கள், வங்கி கணக்குகள், அவர்களது அனைத்துச் சொத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என வருமான வரித்துறை முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், அவரது மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பியது. இது தொடர்பாக சென்னை எழுப்பூர் நீதிமன்றத்திலும் வருமான வரித் துறை வழக்கு தொடர்ந்தது.

நீதிபதி மலர்விழி முன்பாக இந்த வழக்கு ஜூலை 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரம் குடும்பத்தினர் ஆஜராகவில்லை. இது தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதி மலர்விழி ஜூலை 30ஆம் தேதி மூன்று பேரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி நீதிபதி மலர்விழி முன்பு இன்று(ஜூலை 30) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. கார்த்தி சிதம்பரம் வெளிநாடு சென்றுள்ளதாகவும், நளினி சிதம்பரம் உயர் நீதிமன்றத்தில் முக்கியமான வழக்கு விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும் ஸ்ரீநிதி மருத்துவமனைக்குச் சென்றுள்ளதாகவும் அவர்களது வழக்கறிஞர் வக்கீல் மனு தாக்கல் செய்தார். 3 பேரும் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வருமான வரித் துறை வழக்கறிஞர், “கடந்த முறை நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை மீறி 3 பேரும் செயல்படுகின்றனர்” என்று கூறினார்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 30 ஜூலை 2018