மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

இயற்கை விவசாயத்தை அதிகரிக்க வேண்டும்!

இயற்கை விவசாயத்தை அதிகரிக்க வேண்டும்!

ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ளும் முறைக்கு விவசாயிகள் மாற வேண்டுமென ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து பிடிஐ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ராதா மோகன் சிங் இரண்டு நாள் பயணமாக மேகாலயா சென்றுள்ளார். அங்குள்ள கிழக்கு காசி மாவட்டத்தின் லாசோக்துன் பகுதிக்கு இன்று சென்ற அவர் அப்பகுதியில் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்பகுதியில் சுமார் 20 குடும்பங்கள் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றன. அவர்களைப் பாராட்டியதோடு மட்டுமின்றி அவர்களுக்கான உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக ராதா மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

மேலும், மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் இயற்கை விவசாயத்தை எடுத்துச் செல்ல வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். அம்மாநில அதிகாரிகளிடமும் இதுதொடர்பாக அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். மாநிலத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் இயற்கை விவசாயத்தை எடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறியுமாறும் அவர்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்’ என்று கூறப்பட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

திங்கள் 30 ஜூலை 2018