மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

'ஆதார் ஹேக்கர்' பங்காளி யாருன்னு தெரியுமா: அப்டேட் குமாரு

'ஆதார் ஹேக்கர்' பங்காளி யாருன்னு தெரியுமா: அப்டேட் குமாரு

ஆதார் பாதுகாப்புன்னு சொல்லும் போது நம்ம பசங்க ‘போங்கண்னே..இதுல எப்படி லைட் எரியும்’னு மீம்ஸ் போட்டு பெட்ரோமாக்ஸ் லைட்டை உடைச்சாங்க. இப்போ அதை தூக்கிட்டு மறுபடியும் ஒருத்தர் சவால் விட அவர் அக்கவுண்டுக்கு ஒத்த ரூபாயை அனுப்பிருக்காங்க. இதோட விடல. மோடி ஆதார் நம்பரை வேற கேட்டு சவால் விட்டுருக்காங்க. இவரு தான் அக்கவுண்ட்ல காசு போடுறேன்னு சொல்லிட்டு இன்னும் போடலை. இவங்களாவது எவ்வளவு போடுறாங்கன்னு பார்ப்போம். சரி கோலி சவாலுக்கு லட்சக் கணக்குல செலவு கணக்கு எழுதுனவரு இதுக்கு எவ்வளவு காட்ட போறாருன்னு தான் தெரியலை. எனக்கென்னமோ ஆதார் ஹேக் பண்ணுறவங்களும், நம்ம தமிழ் ராக்கர்ஸும் அங்காளி பங்காளியா இருப்பாங்களோன்னு தோணுது. ஏன்னா எவ்வளவு மிரட்டுனாலும் சொன்னா சொன்ன மாதிரி செய்றாங்க.. அப்டேட்டை பாருங்க.. என் அக்கவுண்டுல எவ்வளோ இருக்குன்னு பார்த்துட்டு வாரேன்.

@Ezhilan Naganathan

மூன்று இரவுகள்

தூங்காமல் ..

வாழ்க வாழ்க வாழ்கவே என்று உயிர் பொங்க குரல் எழுப்பும் தொண்டர்களே

நீங்கள் தான் கலைஞரின் உண்மையான மருத்துவர்கள் ....

@Ezhilan Naganathan

நம்ம இராவணன்

எதிரி இராமனை பார்த்து கூறினான்

"இன்று போய் நாளை வா "

@Vimaladhitha Maamallan

‪அண்ணாவுக்கப்புறம் திமுக தலைவரா நெடுஞ்செழியன் ஆகியிருந்தா எப்படி இருந்திருக்கும் ‬

‪இப்ப இருக்கிற எடப்பாடி அதிமுகவாட்டம் இருந்திருக்கும். அடுத்த தேர்தல்லையே காணாம போயிருக்கும்

@saravananucfc

பறந்து விரிந்த காடுகளுக்கு பறந்து திரிந்த பறவைகளே மூலக்காரணம்.

@amuduarattai

குழந்தையை வைத்திருப்பவர்களுக்கு எல்லோரிடமிருந்தும், ஒரு புன்னகை பரிசாக கிடைத்து விடுகிறது.

@HAJAMYDEENNKS

மெடிக்கல் மிராக்கிள் என்ற வார்த்தையை முதல்முறையாக சினிமாவை தவிர்த்து நிஜத்தில் கேட்டது கலைஞர் உடல்நிலை விசயத்தில்தான் !

@rahimgazali

பகல் முழுவதும் அம்பி மாதிரி அமைதியா இருக்கற இந்த நியூஸ் சேனல்கள் ராத்திரியானால் அந்நியனாக மாறிவிடுகின்றன.

@amuduarattai

ஒவ்வொரு "பேட்டன் லாக்" பின்னேயும், ஒரு திருட்டுத்தனமாவது மறைந்திருக்கும்.

@gips_twitz

வேறு முறையில் தகவலை பெற்று ஏமாற்றும் ஹேக்கர்” - ஆதார் தலைமை அதிகாரி

நீங்க தான் தைரியமான ஆளாச்சே, மோடி ஆதார் நம்பர சொல்லி செக் பண்றது

@amuduarattai

"ஃப்ரிட்ஜ்" குடும்பத் தலைவிகளின் நண்பன். குடும்ப உறுப்பினர்களின் எதிரி.

@amuduarattai

மனைவியிடம், நம் மொபைல் இருக்கும் நேரம், ஒரு திகில் படத்தை பார்த்ததை விட, அதிக திகில் உணர்வை தரவல்லது நமக்கு.

@sultan_Twitz

பிரதமர் மோடியின் ஆதார் நம்பரை கேட்டு ஹேக்கர் சவால் - செய்தி

கோலி சேலஞ்சுக்கு 30 லட்சம் செலவாச்சு, இதுக்கு எத்தனை லட்சம் செலவு ஆகுமோ தெரியலையே!?

@Kozhiyaar

'இப்படி கண்ணு மண்ணு தெரியாம வர்றியே உனக்கு அறிவு இருக்கா!?'

'பி.இ படிக்கிறேன் சார்'!!

'பார்த்து பத்திரமா போப்பா'!!!

@Thaadikkaran

நான் சொல்வதை நீ கேட்பதே இல்லை என அடிக்கடி சண்டை இட்டு கொள்கிறது மூளையும் மனசாட்சியும்..!!

வாசுகி பாஸ்கர்

கலைஞரை தமிழினத்தலைவர் என்கிறார் தம்பிதுரை.

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு மிகப்பெரிய பேச்சுரிமையையும் சுதந்திரத்தையும் அதிமுக காரர்கள் பெற்றிருக்கிறார்கள்.

என்னவொன்னு, அடிமைப்பட பழக்கப்பட்டதால இப்போ மோடிக்கு கட்டப்பாவா ஆயிட்டாங்க.

@mosakkara

புவியீர்ப்பு விசையை நியூட்டன் கண்டுபிடித்தார்னு சொன்னா, அப்போ அதுக்கு முன்னாடி உலகில் புவி ஈர்ப்பு விசை இருந்ததில்லையான்னு கேட்க எவ்வளவு முட்டாள்தனம் வேணுமோ, அதே அளவு முட்டாள்தனம் தான்

பெரியார் அப்படி என்ன செய்தார்னு கேட்பதற்கும் வேணும்!!

@laksh_kgm

'திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு வளரவில்லை' என்று சொல்பவர்களின் மூளை வளர்ச்சி பற்றித்தான் நாம் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது !

@Akku_Twitz

செய்தி : பிரதமர் மோடியின் ஆதார் நம்பரை கேட்டு ஹேக்கர் சவால்

நான் ஏழை தாயின் மகன் என்று மோடி பதில்

Don Vetrio Selvini

அண்ணா அறிவாலயம் முதல் முரசொலி அலுவலகம் வரை உனக்காக காத்திருக்க, மருத்துவமனையில் என்ன செய்கிறாய் ?

எழுந்து வா தலைவா...

-லாக் ஆஃப்

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

திங்கள் 30 ஜூலை 2018