மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

2019: 242 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள்!

2019: 242 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள்!

சிலைத் திருட்டைத் தடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு (2019) இறுதிக்குள் தமிழகத்தில் 242 கோவில்களில் சிலைகள் பாதுகாப்பு அறைகள் கட்டிமுடிக்கப்படும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சிலை திருட்டு தொடர்பாகக் கோவில்களில் பாதுகாப்பு அறைகள் கட்ட 2021ஆம் ஆண்டு வரை கால அவகாசம் வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்திடம் தமிழக அரசு கோரியிருந்தது. இதனைக் கேட்ட நீதிபதிகள், கோவில் சிலைகள் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழக அரசும், இந்து அறநிலையத் துறையும் மெத்தனம் காட்டிவருவதாகவும், பாதுகாப்பு அறைகள் அமைப்பதற்கு இவ்வளவு காலம் தேவையா என்று கூறி அந்த கால அவகாசத்தை நிராகரித்தனர்.

மீண்டும் இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட திட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 242 கோவில்களில் சிலைகள் பாதுகாப்பு அறைகள் அமைக்க 2019 டிசம்பர் வரை கால அவகாசம் கோரப்பட்டது. கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் கட்டுவதற்கு, இரண்டு வாரக் காலத்திற்குள் மாவட்ட அளவிலான அதிகாரிகள் குழுக்களை அமைக்கப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 242 பாதுகாப்பு அறைகள் கட்டுவதற்கு இந்து சமய அறநிலையத் துறை வங்கி கணக்கில் இருக்கும் 574 கோடி ரூபாய் நிதியைத் தமிழக அரசு ஒதுக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார். பந்தநல்லூரில் அதிகளவிலான சிலைகள் காணாமல் போனதாகவும், அவை திரும்ப கண்டுபிடிக்கப்பட்டதாகவும், நீதிபதியிடம் தெரிவித்தனர். இதனால் முதற்கட்டமாக பந்தநல்லூரில் உள்ள கோயிலில் பாதுகாப்பு அறை கட்ட நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.

மேலும் இந்த பாதுகாப்பு அறைகள் கட்டுவது தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், சிலை திருட்டு ஆபத்து உள்ள கோயில்களின் பட்டியல் மற்றும் பாதுகாப்பு அறைகள் கட்டுவது தொடர்பான விவரக் குறிப்புகளை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 30 ஜூலை 2018