மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

மீண்டும் உரையாற்றுவார்: விக்ரமன் நம்பிக்கை!

மீண்டும் உரையாற்றுவார்: விக்ரமன் நம்பிக்கை!

திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலம் தேறிவருவதாக இயக்குநர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி வயது மூப்பின் காரணமாக உடல் நிலை நலிவுற்றதால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு (ஜூலை 29) அவர் உடல் நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டதாகவும் பின்னர் சரியானதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் இன்று காலையில் இருந்து அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் அவரைக் காண மருத்துவமனை சென்றனர். இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தவிர மற்றவர்கள் கருணாநிதியைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

நடிகர் சிவக்குமார், சூர்யா ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தனர். நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் நலம் விசாரித்துவிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். “செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணன் மு.க.அழகிரி, ராஜாத்தி அம்மாள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பார்த்தேன். கலைஞர் உடல் நலம் தேறிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் தமிழுக்கு, தமிழ் நாட்டிற்கு ஐந்து முறை முதல்வராக இருந்து செய்துள்ள தொண்டு பெரிது. விரைவில் குணமாகி வீட்டுக்கு செல்ல வேண்டும். அவர் நீடுழி வாழ வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்.

இயக்குநர் விக்ரமன், நடிகர்கள் மனோ பாலா, ரமேஷ் கண்ணா ஆகியோர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இயக்குநர் விக்ரமன் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, “தளபதி மு.க.ஸ்டாலினைச் சந்தித்தோம். தலைவர் உடல் நலம் தேறிவருகிறார் என நம்பிக்கை தெரிவித்தார். எங்களுக்கும் அந்த நம்பிக்கை உள்ளது. வெகு விரைவில் அவர் பூரண நலம் பெற்று நம்மிடையே உரையாற்றுவார்; நம்மை சந்திப்பார். நாங்களும் இறைவனை வேண்டிக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

திங்கள் 30 ஜூலை 2018