மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

நவாஸ் ஷெரிஃப் : சிறைச்சாலையாக மாறும் மருத்துவமனை!

நவாஸ் ஷெரிஃப் : சிறைச்சாலையாக  மாறும் மருத்துவமனை!

இதயநோய் காரணமாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் அனுமதிக்கப்பட்டுள்ள இதய நோய் சிகிச்சை பிரிவு துணை சிறைச்சாலையாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு வெளியான ‘பனாமா பேப்பர்ஸ்’ ஆவணத்தின்படி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெஃரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டனில் கோடிக்கணக்கான சொத்துகளை வாங்கியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக ஊழல் முறையில் லண்டனில் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதாக பனாமா ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரிஃப்புக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அவர் மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி இருவரும் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று (ஜூலை 29) நவாஸ் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். எனவே அவருக்குச் சிறையில் கார்டியோகிராம் என்ற இதயத்துடிப்பு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் சில மாற்றங்கள் காணப்பட்டதால் அடியாலா சிறையில் இருந்து பிம்ஸ் என்ற பாகிஸ்தான் மருத்துவ ஆராய்ச்சி மருத்துவமனையில் நவாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிம்ஸ் மருத்துவமனையின் இதயநோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஐந்து பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சை அளித்து வரும் நிலையில் நவாஸ் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், அவரது உடம்பில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்ததால் இன்சுலின் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

நவாஸ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை மற்றும் இதயநோய் சிகிச்சைப் பிரிவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நவாஸ் குணமடைந்து மீண்டும் சிறைக்கு செல்லும் வரை அவர் சிகிச்சை பெற்று வரும் இதய நோய் சிகிச்சை பிரிவு துணை சிறைச்சாலையாக மாற்றப்படும் என்று இஸ்லாமாபாத் காவல்துறை மூத்த ஆணையர் தெரிவித்துள்ளார்.

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

திங்கள் 30 ஜூலை 2018