மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

மாறன் சகோதரர்கள் அப்பீல் தள்ளுபடி : சுப்ரீம் கோர்ட்!

மாறன் சகோதரர்கள் அப்பீல் தள்ளுபடி : சுப்ரீம் கோர்ட்!

பி.எஸ்.என்.எல் முறைகேடு வழக்கு தொடர்பாக தயாநிதி மாறன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2004-2007ஆம் ஆண்டுகளில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கோபாலபுரம் மற்றும் போட் கிளப் சாலையில் உள்ள தனது வீடுகளுக்குச் சட்ட விரோதமாக அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட தொலைபேசி இணைப்புகளை ஏற்படுத்திக்கொண்டதாகவும், பின்னர் இந்த இணைப்புகளை சன் டிவிக்குப் பயன்படுத்திய வகையில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.78 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் மீது சிபிஐ சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து தயாநிதி மாறன், கலாநிதி மாறன், பிஎஸ்என்எல் முன்னாள் பொது மேலாளர் பிரம்ம நாதன் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.

இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஏழு பேரும் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் மார்ச் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி நடராஜன், வழக்கில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன், பி.எஸ்.என்.எல். பொதுமேலாளராகப் பதவி வகித்த கே.பிரம்மநாதன், முன்னாள் துணைப் பொதுமேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளர் கௌதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலெக்ட்ரீசியன் ரவி உள்பட 7 பேரையும் விடுவிப்பதாகத் தீர்ப்பளித்தார்.

இதனை எதிர்த்து சிபிஐ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. ஜூலை 25ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்தது செல்லாது என்று உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 30 ஜூலை 2018