மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

வன்கொடுமைச் சட்டம்: 3 ஆண்டுகளில் 27 % தண்டனை!

வன்கொடுமைச் சட்டம்: 3 ஆண்டுகளில்  27 % தண்டனை!

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், தண்டனை வழங்கப்படுவது மிகவும் குறைவு என தெரியவந்துள்ளது.

தலித் மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. 2014 முதல் 2016 வரையிலான 3 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அவற்றில் வழங்கப்பட்ட தண்டனை ஆகிய விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 40,208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 28.4 சதவிகித வழக்குகளிலேயே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 38,510 வழக்குகளில் 27.2 சதவிகித வழக்குகளிலும், 2016ஆம் ஆண்டு பதிவான 40,718 வழக்குகளில் 25.8 சதவிகித வழக்குகளிலும் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக இந்த 3 ஆண்டுகளில் வெறும் 27 சதவிகித வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் 195 பிரத்யேகச் சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தாலும், குற்றங்கள் நிரூபிக்கப்படுவது குறைவாகவே உள்ளது. வழக்கு பதிவு செய்வதில் ஏற்படும் தாமதம், போதிய சாட்சிகள் இல்லாமை, சாட்சிகள் பல்டியடிப்பது போன்ற பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 30 ஜூலை 2018