மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

பாலியல் வழக்குகளுக்கு 1023 சிறப்பு நீதிமன்றங்கள்!

பாலியல் வழக்குகளுக்கு 1023 சிறப்பு நீதிமன்றங்கள்!

குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் வல்லுறவு வழக்குகளை விரைவாக முடித்து நீதியை வழங்கும் புதிய திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 1000க்கும் அதிகமான சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தின் கீழ், இந்த சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டம் வருகிறது.

இதற்கு, இந்திய முழுவதும் 1023 சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவைப்படுகிறது. இதை அமைக்க ரூ. 767.25 கோடி செலவாகும். இதில் மத்திய தொகுப்பிலிருந்து ரூ.464 கோடி வழங்கப்படும் என்று சட்ட அமைச்சக ஆவணம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் மேற்கொண்ட விரிவான பணியின் ஆவணங்கள், உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சட்டத்தில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மற்றும் விசாரணை குறித்தும் விரிவாக கூறப்பட்டது. அதாவது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச உயர்நீதிமன்றங்களில் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இந்த வழக்குகளை கையாள அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள். பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விசாரணைக்காக போலீஸ் நிலையம் மற்றும் மருத்துவமனைகளுக்கு சிறப்பு தடயவியல் கருவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணைக்காக குறிப்பிட்ட காலத்திற்கான சிறப்பு விசாரணை குழு உருவாக்கப்படும்.மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வழக்குகளின் விசாரணைக்காக சிறப்பு தடயவியல் ஆய்வு கூடங்கள் அமைக்கப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் 3 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும். தேசிய குற்ற ஆவணக்காப்பகம் பாலியல் வன்முறை குற்றவாளிகள் பற்றிய தகவல்களை தொகுத்து வைக்கும். இது தொடர்பான தகவல்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறையினருடன் தேவைப்படும்போது பகிர்ந்து கொள்ளப்படும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி மையம் மாவட்டங்கள் தோறும் அமைக்கப்படும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

திங்கள் 30 ஜூலை 2018