மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

தா.பாண்டியனை நலம் விசாரித்த முதல்வர்!

தா.பாண்டியனை நலம் விசாரித்த முதல்வர்!

சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவர் தா.பாண்டியனை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மூச்சுச் திணறல் காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மாநிலச் செயலாளருமான தா.பாண்டியன் கடந்த 28ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டயாலிசிஸ் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரை நேற்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில் இன்று (ஜூலை 30) காலை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அங்கு சிகிச்சை பெற்று வரும் தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்தனர். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவனும், தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்தார். இதுதொடர்பாக திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தா.பாண்டியன் மனதிடத்துடன் உள்ளார். மாநாட்டில் அமர்ந்திருப்பதைப் போல இருக்கிறார். விரைவில் உடல் நலம் பெற்று சேவை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

திங்கள் 30 ஜூலை 2018