மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

ஸ்ருதி குறையாத ஜுங்கா வசூல்!

ஸ்ருதி குறையாத ஜுங்கா வசூல்!

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி தன் படத்திற்கான வியாபாரத்தை அதிகரிக்கச் சொந்தமாக தயாரித்த படம் ஜுங்கா.

அரசியல் விமர்சனம், சினிமா தொழில் பற்றிய பகடி என படம் நெடுகிலும் விஜய் சேதுபதி பேசும் வசனங்களில் இடம் பெற்றுள்ள முதல் படம் ஜுங்கா.

பத்திரிகைளுக்கு விஐய் சேதுபதி கொடுக்கும் பேட்டிகளில் மறைமுகமான அரசியல் பார்வை உள்ளக் கருத்துகளை வெளிப்படுத்தத் தயங்கியதில்லை. அதன் தாக்கம் ஜுங்காவில் இருப்பது அப்படத்திற்கு மிகப் பெரும் பலமாக அமைந்திருக்கிறது.

மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

பொதுவாக விஜய் சேதுபதி நடிப்பில் வரும் படங்கள் மெதுவாகவே கல்லா கட்டும். ஜுங்கா அதற்கு எதிர்மறையாகத் தொடக்க காட்சி முதல் நேற்றைய இரவுக் காட்சி வரை ஸ்ருதி குறையாத வசூல் இருந்திருக்கிறது.

மூன்று நாள்களில் தமிழகத்தில் 10.85 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது. விஜய் சேதுபதி ரசிகர்களாலும், சினிமா ஆர்வலர்களாலும் கடந்த மூன்று நாட்களாக கொண்டாப்பட்டு வரும் ஜுங்கா படம் பார்க்க வெகுஜனங்கள் வரவேண்டும்.

அது நடக்குமா ? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 30 ஜூலை 2018