மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

12 கனிமச் சுரங்கங்கள் ஏலம்!

12 கனிமச் சுரங்கங்கள் ஏலம்!

அடுத்த இரண்டு மாதங்களில் 12 கனிமச் சுரங்கங்களை ஏலத்தில் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் 12 கனிமச் சுரங்கங்களை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கர்நாடகாவில் எட்டு இரும்புத் தாது சுரங்கங்களும், ஜார்கண்டில் மூன்று கிராபைட் சுரங்கங்களும், ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு சுண்ணாம்புக்கல் சுரங்கமும் ஏலத்தில் விடப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் சுண்ணாம்புக்கல் மற்றும் கிராபைட் சுரங்கமும், செப்டம்பர் மாதத்தில் இரும்புத் தாது சுரங்கமும் ஏலம் விடப்படும். இரும்புத் தாதுச் சுரங்கத்துக்கான ஏலத்தில் ஸ்பாஞ், பிக் அயர்ன், ஸ்டீல் மற்றும் துகள்கள் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க முடியும். சுண்ணாம்புக்கல் சுரங்கத்துக்கான ஏலத்தில் கிரீன் பீல்டு சிமெண்ட் மற்றும் பிரவுன் பீல்டு சிமெண்ட் ஆலை நிறுவனங்கள் பங்கேற்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

திங்கள் 30 ஜூலை 2018