மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

‘காலா’வை துரத்தும் ‘கடைக்குட்டி சிங்கம்’!

‘காலா’வை துரத்தும் ‘கடைக்குட்டி சிங்கம்’!

தமிழ் சினிமாவில் 2018ல் ஜனவரி முதல் வெளியான திரைப்படங்களில் கடைக்குட்டி சிங்கம் பாக்ஸ் ஆபீஸில் அனைத்துப் படங்களையும் கடந்து வசூலில் முதல் இடத்தை நோக்கிப் பயணிக்க தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ஸ்கெட்ச் (விக்ரம்), தானா சேர்ந்த கூட்டம் ( சூர்யா), குலேபகாவலி (பிரபுதேவா) மற்றும் அதன் பின் ரிலீஸ் ஆன இரும்புத் திரை (விஷால்), காலா (ரஜினி) போன்ற நட்சத்திர முக்கியத்துவம் மிக்க படங்கள் 20 கோடியை வசூலில் கடும் போராட்டத்திற்குப் பின் கடந்து வந்த படங்களாகும்.

பண்டிகைக் காலம், போட்டிக்குப் படங்கள் இன்றி தனித்து வந்த இந்த படங்களுக்கு கூடுதல் டிக்கெட் கட்டணம், பிரம்மாண்டமான விளம்பரங்கள் கூடுதல் அம்சங்களாக இருந்தன.

கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு இது போன்ற எந்த அம்சங்களும் கிடைக்கப்பெறவில்லை.

ஜூலை 13 அன்று தமிழ்ப் படம் - 2 உடன் களம் கண்ட கடைக்குட்டி சிங்கம் வசூல் தொடக்கம் முதல் ஏறுமுகமாகவே இருந்ததது குறிப்பிடத்தக்கது.

குடும்பங்கள் கொண்டாட்டத்துடன் பார்க்கக் கூடிய படமாக இருந்ததால் படம் பார்க்க வருபவர்கள் கூட்டம் குறைவின்றி தொடர்ந்தது. இந்த வாரம் ஜுங்கா, மோகினி என இரண்டு நட்சத்திர முக்கியத்துவம் மிக்க படங்கள் ரிலீஸ் ஆனாலும் கடைக்குட்டி சிங்கம் கல்லாவிற்கு பாதிப்பு ஏற்படவில்லை என்கிறது தியேட்டர் வட்டாரம்.

நேற்று வரை இப்படம் தமிழகத்தில் 40 கோடி வரை மொத்த வசூல் ஆகியுள்ளது என்கிறது விநியோக வட்டாரங்கள்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 30 ஜூலை 2018