மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

இணையத்தைச் சுற்றும் யுவனின் இசை!

இணையத்தைச் சுற்றும் யுவனின் இசை!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரைஸா, ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்துள்ள ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இசை வெளியீடு நேற்று (ஜூலை 30) நடைபெற்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலம் பிரபலமானவர்களில் முக்கியமானவர் ஓவியா. அதைத் தொடர்ந்து அவருக்குப் பல பட வாய்ப்புகள் வந்தாலும் நல்ல கதையம்சம் உள்ள தனக்கு விருப்பமான படங்களையே தேர்வு செய்வேன் என்று முடிவெடுத்துள்ளார். தற்போது களவாணி 2 படத்தில் அவர் நடித்து வருகிறார். அதே சீசனில் பிரபலமானவர்களில் ரைஸா, ஹரிஷ் கல்யாணும் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இளன் இயக்கியுள்ளார். இசையமைப்பதோடு யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார்.

இளைஞர்களைக் கவரும் விதமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர், டீசர் ஏற்கனவே வெளியாகி கவனம் பெற்றன. ‘ஹை ஆன் லவ்’ என்ற பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது. சித் ஸ்ரீராம் பாடிய அந்தப் பாடலை நிரஞ்சன் பாரதி எழுதியிருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரையும் கவர்ந்த அப்பாடல் யூ டியூப்பில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து வெளியான டோப் டிராக் பாடலும் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து படத்தின் அனைத்துப் பாடல்களும் நேற்று வெளியாகியுள்ளன.

சென்னையில் நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், சிம்பு, தனுஷ், ஐஸ்வர்யா, இயக்குநர்கள் அமீர், ராம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் விழாவில் நேரடியாக இசைக்கப்பட்டது. 12 டிராக்குகள் வெளியாகியுள்ள நிலையில் மதன் கார்க்கி, விவேக் உள்ளிட்ட பாடலாசிரியர்களோடு இயக்குநர் இளனும் சில பாடல்களை எழுதியுள்ளார். இந்த ஆல்பம் தற்போது ஒரு லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.

‘பியார் பிரேமா காதல்’ இசை

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 30 ஜூலை 2018