மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

டிராக்டர் பந்தயம்: கூரை விழுந்து விபத்து!

டிராக்டர் பந்தயம்: கூரை விழுந்து விபத்து!

டிராக்டர் பந்தயத்தைக் காண்பதற்காக நூற்றுக்கணக்கானோர் மைதானத்தின் கூரை மீது ஏறி நின்றபோது ஏற்பட்ட விபத்தில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீ கங்காநகர் மாவட்டம் ஆனாஸ் மண்டி என்ற இடத்தில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று (ஜூலை 30) டிராக்டர் பந்தயம் நடைபெற்றது. பாய்ந்து வரும் டிராக்டர்களைப் பார்க்கும் ஆவலுடன் இப்போட்டியைக் காண்பதற்காக சுமார் 5000 மக்கள் கூடியிருந்தனர்.

மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தகரக் கூரையின் மீது ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஏறியதால் அந்தக் கூரை பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது. கூரையில் இருந்த மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. போட்டியைக் காண வந்த மக்கள் சிதறி ஓடியதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், ஏராளமானோர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 7 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதால், அவர்கள் ஸ்ரீகங்கா நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

போட்டி அமைப்பாளர்கள் டிராக்டர் போட்டி நடத்துவதற்கு உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 30 ஜூலை 2018