மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

ஜியோமியை வீழ்த்திய சாம்சங்!

ஜியோமியை வீழ்த்திய சாம்சங்!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் இருந்த தென்கொரிய நிறுவனமான சாம்சங்கின் சாதனையைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜியோமி முறியடித்துக் காட்டியது. தற்போது சீன நிறுவனமான ஜியோமியைப் பின்னுக்குத் தள்ளி சாம்சங் நிறுவனம், ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2018 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் குறித்த ஆய்வறிக்கையை கவுண்டர்பாய்ன்ட் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் சாம்சங் நிறுவனம், 29 சதவிகித பங்குகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தற்போது ஃபேசியல் தொழில்நுட்பம் மற்றும் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வசதிகளுடன் வெளியாகியுள்ள சாம்சங்கின் `J series' ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்தப் பட்டியலில் 28 சதவிகித பங்குகளுடன் ஜியோமி நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதுகுறித்து பேசிய கவுண்டர்பாய்ன்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி ஆய்வாளர் அன்ஷிகா ஜெயின், "சாம்சங் நிறுவனம் குறைந்த விலை ஸ்மார்ட்போன் வரிசையை மட்டுன்றி அதன் மொத்த போர்ட்ஃபோலியோக்களையும் மாற்றியமைத்துவிட்டது. உயர் ரக மாடல்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் குறைந்த மற்றும் நடுத்தர மாடல்களிலும் அதிக கவனம் செலுத்தியதன் விளைவாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

ஜியோமியின் பின்னடைவு குறித்து பேசிய அவர், "ஜியோமி நிறுவனம், கடந்த சில மாதங்களில் எந்தொரு புது மாடலையும் வெளியிடவில்லை. இருப்பினும் அதன் முந்தைய மாடல்களுக்கு இங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இந்தப் பட்டியலில் அதிகம் விற்பனையான மாடல்களின் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் மூன்று இடங்களை ஜியோமி நிறுவனமே கைப்பற்றியுள்ளது. இருப்பினும் புதிய மாடல்கள் வராதது மட்டுமே அதன் பின்னடைவாகும்" என்று கூறியுள்ளார்.

தயாரிப்பைத் தாண்டி, இந்தியாவில் சந்தைப்படுத்துதலில் சாம்சங் நிறுவனம் காட்டிய ஆர்வமே அந்நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கான முக்கிய காரணியாகக் கூறப்படுகிறது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பிரதான ஸ்பான்சராகவும் விளங்கியது.

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

திங்கள் 30 ஜூலை 2018