மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கான கலந்தாய்வு!

தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கான கலந்தாய்வு!

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 30) சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றுவருகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 16, 17, 18 தேதிகளில் நடக்குமென்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட தவறுகள் காரணமாகத் தமிழ்வழி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இந்தக் கலந்தாய்வை நிறுத்திவைக்கத் தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு இன்றும் நாளையும் ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதில், 13 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடாக 723 எம்பிபிஎஸ் இடங்களும், 645 பல் மருத்துவ இடங்களும் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் உள்ள 165 பொதுப்பிரிவு இடங்கள், 247 சிறுபான்மையினர் இடங்கள் மற்றும் 20 இதர பிரிவு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில், இன்றைய கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

திங்கள் 30 ஜூலை 2018