மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

மரபணு மாற்றுப் பயிர்களுக்கான தேவை என்ன

மரபணு மாற்றுப் பயிர்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்துவிட்டன. இந்தியாவில் 40 சதவிகிதப் பயிர்கள் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என்பது அதிகாரப்பூர்வமான ஆய்வறிக்கை. இந்திய நிலங்களில் விதைக்கப்படும் விதைகளில் எவையெல்லாம் மரபணு மாற்றம் செய்யப்பட்டது எனும் தகவலைத் தெரிந்துகொள்ள முடியவில்லை என்று கைவிரித்தது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (Food Safety and Standards Authority of India).

“மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் ஆபத்தானவை. அவற்றை நம் சந்தைக்குள் வரவிடக் கூடாது” – இது 2014 தேர்தலுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்த பாஜகவின் குரல். காங்கிரஸால் கொண்டுவரப்பட்ட பி.டி பருத்தி மற்றும் கத்திரிக்கு எதிராக முதல் குரல் எழுப்பியது பாஜகதான். இன்று மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு வாயே திறக்காமல் அனுமதிக் கையெழுத்துப் போட்டிருக்கிறது பாஜக. இது காலங்காலமாக நாம் பார்த்துவரும் அரசியல் போலித்தனம்.

மரபணு மாற்று விதைகள் வேண்டுமா வேண்டாமா எனும் கேள்விக்கு முன்பு இந்திய சந்தையில் மரபணு மாற்றப்பட்ட விதைகளின் தேவை என்ன என்னும் கேள்வியை நாம் எழுப்பிக்கொள்ள வேண்டும்.

விளைச்சலை அதிகமாக்கும் பொருட்டும் பூச்சித் தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொள்ளும் பொருட்டும் மரபணு மாற்று விதைகளை நாம் அனுமதிக்க வேண்டும் என்கிறது நவீன வேளாண்மை.

அதிகமான உற்பத்தி என்பது மரபணு மாற்றப்பட்ட விதைகள் வேண்டும் என்று இவர்கள் சொல்வதற்குக் காரணம். ஆனால் பசுமை புரட்சி கொண்டுவரப்பட்டதே “அதிக விளைச்சல்” எனும் தாரக மந்திரத்தால்தானே! அப்படியானால் மரபணு மாற்று விதைகளின் தேவை என்ன எனும் கேள்விக்கு இவர்கள் முன்வைக்கும் பதில், “பசுமைப் புரட்சியால் அதிக உற்பத்தியை கொடுக்க முடியவில்லை. ஆதலால், மரபணு மாற்று தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்” என்பதுதான்.

அதாவது, பசுமைப் புரட்சியால் தற்போது போதுமான விளைச்சலைக் கொடுக்க முடியவில்லை என்பதை அவர்களே ஒப்புக்கொண்டதன் விளைவுதான் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கான தேவையாக உருவெடுத்து நிற்கிறது!

அதிக விளைச்சல் தரும் என்று சொல்லப்பட்ட பசுமைப் புரட்சி தற்போது தோல்வி அடைந்ததற்கான காரணம் என்ன?

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 30 ஜூலை 2018