மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

காற்றைத் தூய்மைப்படுத்துவது எப்படி?

காற்று எனும் ஆற்றலை நாம பயன்படுத்திக்கலாம். ஆனால் ‘காற்று’ எனும் பேருயிரை நம்மால் பயன்படுத்த முடியாது. காற்றின் மூலம் பெறப்படும் ஆற்றலைப் பயன்படுத்த முடியும். காத்தாடி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுவது காற்றின் ஆற்றலை பயன்படுத்துவது. ஆனா பட்டாசு வெடிப்பது, புகை வாகனங்களை அதிகமாகப் பயன்படுத்துவது, ஏசி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றைப் பயன்படுத்துவது ஆகியவை காற்றை மோசமாக மாசுபடுத்தும். இதுனால காத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. காற்றினால் வாழும் உயிரினங்களான நமக்குதான் பாதிப்பு.

உயிர் காற்றை (ஆக்ஸிஜன்) சாப்பிட்டு வாழுற நுண்ணுயிரிகளின் கூட்டம் பெருகுனாதான், காற்று சமநிலையில இருக்கும். எனவே கரிமக் காற்றின் அளவை முடிந்தவரை குறைப்பதுதான் நம்முடைய மிகப் பெரிய பணி. மரங்கள் நடும்போதுகூட, பொருளாதாரப் பயன் தருமா என்று பார்த்து தேக்கு, சில்வர் ஓக், ஐலாந்தஸ் ஆகிய மரங்களை வைப்பதைவிட, புங்கன், வேங்கை, குமிழ், வில்வம், பூவரசன், ஆலம், அத்தி, அகத்தி போன்ற காட்டின் தன்மை கொண்ட மரங்களை நடவு செய்யுங்க. காற்றை சுத்திகரிப்பதில் புங்க மரத்தின் ஆற்றல் மிகவும் பெரியது.

அதிகமான புதர் செடிகளை வளர விடுங்க. ஆவாரம், சீதா, மாதுளை போன்ற புதர் வகை செடிகளை அதிகமா வளர்த்திடுங்க. ஏன்னா அவைதான் பட்டாம்பூச்சி, தேனி, சிட்டுக்குருவி, பூச்சிகள், புழுக்கள், ஊர்வனங்கள் ஆகியவற்றுக்கு உணவாவும் உறைவிடமாவும் இருக்கும். எங்கே உயிர்களின் எண்ணிக்கை இப்படி இயல்பா இருக்கோ, அங்கெல்லாம் காற்றின் தன்மை சமநிலையோடு இருக்கும்.

- நரேஷ்

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

திங்கள் 30 ஜூலை 2018