மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

மலையாள நடிகர்களுக்கு கட்டுப்பாடு விதித்த ‘அம்மா’!

மலையாள நடிகர்களுக்கு கட்டுப்பாடு விதித்த ‘அம்மா’!

நடிகர் திலீப் விவகாரம் உள்ளிட்ட எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பொதுவெளியில் நடிகர், நடிகைகள் கருத்து தெரிவிக்கக்கூடாது என்று மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’அமைப்பு நேற்று(ஜூலை 29) அறிக்கை வெளியிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு கேரளாவில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளானார். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மலையாள நடிகர் திலீப் சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த பிரச்சினைக்குப் பின் கேரளாவின் நடிகர் சங்கமான ‘அம்மா’வில் பொருளாளராக பதவிவகித்த திலீப் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

அம்மாவின் புதிய தலைவராக நடிகர் மோகன்லால் தேர்வு செய்த பின், ஜூன் 24ஆம் தேதி ‘அம்மா’ அமைப்பின் பொதுக்குழு கூட்டம் கொச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திலீப்பை மீண்டும் அமைப்பில் இணைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்யா நம்பீசன், பார்வதி உள்ளிட்ட நடிகைகள் ‘வுமன் சினிமா கலெக்டிவ்’ என்ற இயக்கம் சார்பாக அறிக்கை வெளியிட்டனர். திலீப்பை மீண்டும் இணைப்பதைக் கண்டித்து அம்மா அமைப்பிலிருந்து விலகினர். தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சைகளைக் கிளப்பியது. அம்மா அமைப்பும் நடிகர் மோகன் லாலும் விமர்சிக்கப்பட்டனர். திலீப் தான் குற்றமற்றவராக நிரூபணமான பின்னரே அமைப்பிற்கு வருவதாக அறிக்கை வெளியிட்டார்.

மேலும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமை தாங்கி விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மோகன்லாலை அழைக்கக்கூடாது என சில நடிகர் , நடிகைகள், பத்திரிகையாளர்கள் கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் மலையாள நடிகர் சங்கமான அம்மா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “நடிகர் திலீப் விவகாரம் உள்ளிட்ட எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பொதுவெளியில் நடிகர், நடிகைகள் கருத்து தெரிவிக்கக்கூடாது. பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாகக் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். எதுவானாலும் நடிகர் சங்கத்திலேயே தெரிவிக்க வேண்டும். பொதுவெளியில் கருத்துகள் கூறி சங்கத்தை இழிவு படுத்தக்கூடாது” எனக் கூறப்பட்டுள்ளது.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 30 ஜூலை 2018