மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

தொழிலதிபர்கள் பக்கம் நிற்பதில் பயமில்லை: மோடி

தொழிலதிபர்கள் பக்கம் நிற்பதில் பயமில்லை: மோடி

தொழிலதிபர்களுடன் நிற்பதில் தனக்கு எந்தப் பயமும் இல்லை எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசியிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடி எப்போதும், வசதி படைத்தவர்களுக்கும், கோடீஸ்வரர்களுக்கும், கார்ப்பரேட்களுக்கும் பேசுகிறார்; சிறு வணிகர்களுக்கு ஆதரவாகப் பேசுவதில்லை. ஏழை மக்களிடம் இருந்தும், சிறு வர்த்தகர்களிடம் இருந்தும் பணத்தை எடுத்துக் கொள்கிறது மத்திய அரசு.

பிரதமரின் முகம் ஜியோ விளம்பரத்தில் வந்தபோதே, அவர் பணக்காரர்கள் குறித்துத்தான் அக்கறை கொள்வார் எனப் புரிந்து கொண்டேன். இந்த நாட்டின் காவல்காரர் என்று பிரதமர் கூறி வருகிறார். உண்மையில் பிரதமர் மோடி காவல்காரர் அல்ல; பெரு நிறுவனங்களின், பணக்காரர்களின் கூட்டாளி” என்று விமர்சித்திருந்தார்.

இந்த விமர்சனத்திற்குப் பிரதமர் மோடி நேற்று பதிலளித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் நேற்று (ஜூலை 29) 81 புதிய முதலீட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைத்தார். பின்னர் பேசிய அவர், “என்னுடைய நோக்கங்கள் தெளிவானவை. தொழிலதிபர்களின் பக்கம் நிற்பதில் நான் பயப்படுவதில்லை. விவசாயிகள், வங்கி ஊழியர்கள் போன்று தொழிலதிபர்களும் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்காற்றுகின்றனர். தொழிலதிபர்களும் நாட்டைக் கட்டமைத்து வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். அவர்களைத் திருடர்கள் என்று கூறுவது பொருத்தமில்லை மகாத்மா காந்தி தொழிலதிபர் பிர்லா வீட்டில்தான் வசித்தார். அது குறித்து அவர் பயந்ததில்லை" என்று தெரிவித்தார்.

“சிலர் தொழிலதிபர்களை வெளிப்படையாகச் சந்திப்பதற்கு விரும்புவதில்லை. எல்லாமே திரைமறைவுதான். பல திரைமறைவு பேரங்களில் விவரங்களை அமர்சிங் அறிவார்” எனக் கூட்டத்தில் இருந்த சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அமர்சிங்கைச் சுட்டிக் காண்பித்து பேசினார் மோடி.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

திங்கள் 30 ஜூலை 2018