மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

ராணுவ உற்பத்திக்குப் புதிய கொள்கை!

ராணுவ உற்பத்திக்குப் புதிய கொள்கை!

பாதுகாப்புத் துறைக்கு உற்பத்தியை அதிகரிக்க புதிய கொள்கை அடுத்த மாதத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், உள்நாட்டில் பாதுகாப்புத் துறை உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக முக்கியமான புதிய கொள்கை ஒன்று வகுக்கப்படவுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய கொள்கை அடுத்த மாதத்தில் வெளியாகலாம் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மூத்த அதிகாரி மேலும் கூறுகையில், "மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிக்க புதிய கொள்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

அடுத்த பத்து ஆண்டுகளில் ராணுவ உபகரணங்கள் மற்றும் தளங்களில் உலகின் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியாவையும் ஆக்கும் முயற்சியில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இதன் வரைவறிக்கை ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். எனவே, அடுத்த மாதத்தில் இந்தப் புதிய கொள்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர் விமானங்கள். ஹெலிகாப்டர்கள் மற்றும் போர்க் கருவிகளின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்குப் புதிய கொள்கையில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

திங்கள் 30 ஜூலை 2018