மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

‘எழுமின்’ வியாபாரத்துக்காக தனுஷ் பாடிய பாடல்!

‘எழுமின்’ வியாபாரத்துக்காக தனுஷ் பாடிய பாடல்!

நடிகர் விவேக், தேவயானி நடிப்பில் வெளிவர இருக்கும் ‘எழுமின்’ திரைப்படத்தில் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான உரு படத்தின் தயாரிப்பாளரான வி.பி.விஜி எழுமின் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில், விவேக், தேவயானி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களோடு பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்பட பலரும் நடித்திருக்கிறார்கள்.

தற்காப்பு கலைகளைத் தங்களது விருப்பமாகத் தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களைப் பற்றிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெறும் எழுச்சிமிகு பாடல் ஒன்றை யோகி பி பாடி இருக்கிறார். இதனையடுத்து இந்தப் படத்தில் இடம்பெறும் மற்றொரு பாடலை நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற பல படங்களில் நடிகர்கள் தனுஷ் - விவேக் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர்கள் இணைந்து நடித்த படிக்காதவன், உத்தம புத்திரன், மாப்பிள்ளை, வேலையில்லா பட்டதாரி 1 & 2 ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. இந்த ராசியான ஜோடியை மீண்டும் ஒருமுறை இணைத்திருக்கிறது, நடிப்பில் அல்லாமல் பாடல் மூலம், எழுமின் திரைப்படத்தில்.

பாடலாசிரியர் தமிழணங்கு வரிகளில் “எழடா... எழடா” எனத் தொடங்கும் பாடலுக்கு கணேஷ் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். “படத்தின் திரைக்கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் உத்வேகம் பொருந்திய இந்தப் பாடலை, தனுஷ் பாடினால்தான் சரியாக அமையும்” எனப் பரிந்துரைத்திருக்கிறார் நடிகர் விவேக். அதன் அடிப்படையில் தனுஷ் இந்தப் பாடலை பாடியதாகச் சொல்கிறார் இயக்குநர் வி.பி.விஜி. மேலும், இந்தப் பாடலுக்கு மட்டுமல்லாமல், படத்திற்கும் தனுஷின் குரல் பலம் சேர்த்திருப்பதாகக் கூறுகிறார் விஜி.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 30 ஜூலை 2018