மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

தியாகம் செய்யும் பெற்றோர்கள்!

தியாகம் செய்யும் பெற்றோர்கள்!

சரிபாதி இந்தியப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்விக்காகக் கூடுதல் நேரம் பணியாற்றுவதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 84 விழுக்காடு பெற்றோர்கள் தங்களின் ஊதியம் குழந்தைகளின் கல்லூரி செலவுக்குப் போதவில்லை என்கின்றனர். 41 விழுக்காட்டினர் குறிப்பிட்டு கல்வி சேமிப்பு எதையும் சேமித்து வைக்கவில்லை என்கின்றனர். இதனால் இந்தியப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்விச் செலவுக்காக நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதுமட்டுமின்றி தனிப்பட்ட முறையில் கூடுதல் நேரம் பணியாற்றுவது, விடுமுறைக் காலங்களில் பணியாற்றுவது, கடன் வாங்குவது போன்ற தியாகங்களைச் செய்கின்றனர்.

இதுகுறித்து ஹெச்எஸ்பிசி வெளியிட்டுள்ள ஆய்வில், ‘இந்தியப் பெற்றோர்களில் சுமார் 49 விழுக்காட்டினர் தங்களது குழந்தைகளின் கல்லூரி செலவுக்காக விடுமுறை நாட்களிலும், கூடுதல் நேரங்களிலும் பணியாற்றுகின்றனர். மேலும் கடன் வாங்குகின்றனர். கல்விச் செலவுக்கான சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் வெளியில் உணவகங்களுக்குச் சென்று உண்பதைத் தவிர்ப்பது, திரையரங்குகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பது போன்றவற்றை 60 விழுக்காடு இந்தியப் பெற்றோர்கள் மேற்கொள்கின்றனர். இது உலகளவில் 41 விழுக்காடாக உள்ளது.

இந்தியப் பெற்றோர்களில் 59 விழுக்காட்டினர் தங்களது விடுமுறைக் காலங்களைக் குறைத்துக்கொள்வதாகவும், 49 விழுக்காட்டினர் கூடுதல் நேரம் பணியாற்றுவதாகவும் கூறுகின்றனர். இது உலக அளவில் முறையே 41 மற்றும் 35 விழுக்காடாக உள்ளது. இந்தியப் பெற்றோர்கள் தோராயமாக தங்களது குழந்தைகளின் கல்லூரி செலவுக்காக ரூ.3,79,000 செலவிடுகின்றனர். உலக அளவில் தங்களது குழந்தைகளின் கல்லூரி கல்விச் செலவுக்காக மூன்றில் ஒரு பங்கு (35 %) பெற்றோர்கள் கடன் வாங்குகின்றனர். இதுவே இந்தியாவில் கடன் வாங்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு (64%) பங்காக உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளில், 10,000 பெற்றோர்களிடமும், 1,500 மாணவர்களிடமும் நடத்தப்பட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

திங்கள் 30 ஜூலை 2018