மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

சாயிஷாவின் ஆசை!

சாயிஷாவின் ஆசை!

விரைவில் சாயிஷா தமிழில் சுத்தமாகப் பேசினால் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்று சமீபத்தில் கஜினிகாந்த் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் கூறியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் சிம்ரனுக்கு அடுத்து ரசிகர்களைக் கவரும் நாயகி யார் என்பதில் ஒரு வெற்றிடமாகவே இருந்து வருகிறது. நடிப்பு, நடனம், தோற்றம், உடுத்தும் பொருத்தமான ஆடைகள், மாடர்ன் டிரஸ் ஆக இருந்தாலும் சரி, புடவை உள்ளிட்ட குடும்பப் பாங்கான ஆடையாக இருந்தாலும் சரி, ரசிகர்களின் மனதில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்கும் பாக்கியம் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். சிம்ரனுக்குப் பிறகு பல நாயகிகள் அறிமுகமானாலும் யாரும் தொடர்ந்து ஹிட் படங்களிலோ அல்லது விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தங்களை மெருகேற்றிக் கொள்ளவில்லை.

அந்த இடத்தை நடிகை சாயிஷா பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தமிழில் வனமகன் திரைப்படம் மூலம் அறிமுகமானாலும், கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம்தான் தமிழ் நாடெங்கும் தெரிந்த ஒரு நடிகையாக மாறியிருப்பவர் நடிகை சாயிஷா. கடந்த வெள்ளியன்று அவர் நடிப்பில் ஜுங்கா படமும் வெளிவந்துள்ளது. வரும் வாரம் ஆர்யாவுடன் நடித்துள்ள கஜினிகாந்த் திரைப்படமும் வெளிவர இருக்கிறது. குறுகிய இடைவெளிக்குள் அடுத்தடுத்து சாயிஷாவின் மூன்று படங்களும் மக்களைச் சென்றடைகிறது.

உடலை ரப்பராக வளைத்து அவர் நடனமாடுவதற்குப் பல நட்சத்திரங்களும் ரசிகர்கள். நடிப்பில் மட்டும் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் காட்டினால் அடுத்த சில வருடங்களுக்கு சிம்ரனைப் போல் தமிழ்நாட்டு ரசிகர்களின் கனவு கன்னியாகவும் சாயிஷா இருப்பார் என்கிறார்கள்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 30 ஜூலை 2018