மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

கருணாநிதி: மீண்டும் குறையும் ரத்த அழுத்தம்!

கருணாநிதி: மீண்டும் குறையும் ரத்த அழுத்தம்!

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் ரத்த அழுத்தம் மீண்டும் குறைந்துகொண்டே வருவதால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

கடந்த வெள்ளியன்று நள்ளிரவு 1.30 மணிக்கு கோபாலபுரம் வீட்டில் இருந்து கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவருடைய ரத்த அழுத்தம் குறைந்துகொண்டே இருப்பதால் வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாது என்று மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். அன்று அதிகாலை 2.30க்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

“திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி ஜூலை 28 அதிகாலை 1.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது ரத்த அழுத்தம் குறைந்ததை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவர் குழுவினர் அவரது ரத்த அழுத்தத்தை சீராக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தொடர் கண்காணிப்பில் இருக்கிறார் திமுக தலைவர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் கருணாநிதியின் ரத்த அழுத்தத்தை, போராடி இயல்பு நிலைக்குக்கொண்டு வந்தனர் மருத்துவர்கள்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018