மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

அப்பல்லோ: ஜெ. அறையில் இன்று ஆய்வு!

அப்பல்லோ: ஜெ. அறையில் இன்று ஆய்வு!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் முதல்முறையாக அப்பல்லோ மருத்துவமனையில் இன்று நேரடியாக ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள்.

ஆணைய வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் மற்றும் செயலாளர் கோமளா ஆகியோருடன் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் ராஜா செந்தூர் பாண்டியன் உள்ளிட்டவர்களும் செல்ல உள்ளனர்.

7 மணிக்கு தொடங்கி 7.45 வரை 45 நிமிடங்கள் ஆய்வு செய்கின்றனர். இந்த ஆய்வின் போது அப்பல்லோ நிர்வாகத்திடம் மற்றும் மருத்துவர்களிடம் எவ்விதமான கேள்விகளோ விவாதம் செய்ய கூடாது என்று நீதிபதி ஆறுமுகசாமி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களின் பிரதிநிதியாக ஒரு போட்டோ கிராபர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார். விசாரணை ஆணையம் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கியது. மூன்று மாத காலக்கெடு கொடுக்கப்பட்ட நிலையில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த காலக்கெடுவும் ஜூன் 24-ம் தேதியோடு முடிவடைந்து மீண்டும் நான்கு மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் அவர் தங்கி சிகிச்சை பெற்ற இரண்டம் தளத்தில் உள்ள அறை, அவசர சிகிச்சை பிரிவு, சமையலறை அப்பல்லோ மருத்துவர்கள் அமைச்சர்களுக்கு அதிகாரிகளுக்கு சிகிச்சை குறித்து விவரித்த அறை, அமைச்சர்கள் அதிகாரிகள் தங்கியிருந்த அறை மற்றும் சசிகலா உறவினர்கள் தங்கியிருந்த மூன்றாம் தளத்தில் உள்ள அறை என பத்துக்கும் மேற்பட்ட அறைகளில் முதன் முறையாக ஆய்வு செய்கின்றனர்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற முறையில் ரத்த பந்தம் என்று ஜெ. தீபா ஆணையத்தில் மனு செய்து அப்பல்லோ ஆய்வில் அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு முடிந்த பின்பு 8.15 இல் இருந்து 8.45 வரை அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அறைகளை பார்வையிட அனுமதி அளித்துள்ளார்.

அப்போலோ மருத்துவமனையும் பல ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஜெயலலிதா சிகிச்சை பெற்ற ஆவணங்களையும் ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. இந்த ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு மருத்துவ குழு அமைப்பதற்கான ஒப்புதலையும் தமிழக அரசு வழங்கியுள்ளது. விரைவில் மருத்துவ குழு அமைக்கப்பட்டு ஆய்வை மேற்கொள்ள இருக்கிறது. இந்த சூழலில் அப்போலோ மருத்துவமனைக்கு ஆணையம் சார்பாக வழக்கறிஞர்கள் செல்ல இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்போலோ மருத்துவ மனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எவ்வாறு இருந்தார் என்பது வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ மூலமாக முதன்முறையாக தெரிய வந்தது. இதை தொடர்ந்து டாக்டர் சிவக்குமார் ஆணையத்திடம் கொடுத்த ஜெயலலிதாவினுடைய ஆடியோவை இவை ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் எவ்வாறு இருந்தார் என்பது தெரியவந்தது. இவ்வாறு இரண்டு ஆதாரங்கள் மட்டுமே ஜெயலலிதா இருந்த நிலைமை குறித்து தெரிய வந்த நிலையில் முதல் முறையாக ஆணையம் நேரடியாக ஆய்வு மேற்கொள்கின்றனர். பலரும் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் அவர் எங்கிருந்தார் எப்படி இருந்தார் என்பதை வாக்கு மூலமாக மட்டுமே ஆணையத்திடம் தெரிவித்திருந்தனர். எனவே இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018