மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

தினகரன் வீட்டின் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு?

தினகரன் வீட்டின் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு?

டிடிவி தினகரன் வீட்டின் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரனின் வீடு சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ளது. இன்று (ஜூலை 29) மதியம் தினகரன் வீட்டு வாசலில் நின்றிருந்த காரில் பெட்ரோல் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தினகரனின் கார் ஓட்டுநர்கள் பாண்டியன், பரமசிவன் மற்றும் புகைப்பட கலைஞர் டார்வின் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

பெட்ரோல் குண்டு வீச்சை தொடர்ந்து வீட்டில் இருந்து வெளியே வந்த தினகரன் மனைவி அனுராதா மற்றும் அவரது மகள் ஆகியோர் காயமடைந்த கார் ஓட்டுநருக்கு ஆறுதல் தெரிவித்தனர் . இதை தொடர்ந்து மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் காஞ்சிபுரம் நகரச் செயலாளராக பணியாற்றியவர் புல்லட் பரிமளம். அண்மையில் இவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தினகரனை நிர்வாகிகள் சந்திக்க முடியாதபடி பல்வேறு தடைகளை அவரது உதவியாளர் ஜனார்த்தனன் ஏற்படுத்தியுள்ளார். இதனால், தினகரனை சந்திக்க வந்து முடியாமல் பலரும் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். இது தொடர்பாக நமது மின்னம்பலத்தில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். புல்லட் பரிமளமும் தினகரனை சந்திக்க முயற்சித்து முடியாததால் விரக்தி அடைந்துள்ளார்.இந்நிலையில், இன்று தினகரன் வீட்டுக்குச் சென்ற புல்லட் பரிமளம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்காகத் தான் பெட்ரோலை எடுத்து சென்றிருந்ததாகவும் அது பற்றிக்கொண்டு விபத்து ஏற்பட்டதில் கார் பற்றிக்கொண்டதாகவும் புல்லட் பரிமளத்தின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், புல்லட் பரிமளத்தின் காரில் வைக்கோல், வீச்சரிவாள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதால் நாசவேலையில் ஈடுபடுவதற்காகத் திட்டமிட்டுத்தான் அவர் வந்ததாக தினகரன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக புல்லட் பரிமளத்தின் ஓட்டுநர் சுப்பையா என்பவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

2 நிமிட வாசிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

4 நிமிட வாசிப்பு

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

ஞாயிறு 29 ஜூலை 2018