மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

சமந்தா : ரசிகருடன் கண்டதும் காதல்!

சமந்தா : ரசிகருடன் கண்டதும் காதல்!

நடிகை சமந்தாவின் ரசிகர், தன்னையும் சமந்தாவையும் வைத்து திருமணம் ஆனது போல் போட்டோஷாப்பில் வேலை பார்த்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதை சமந்தா பகிர்ந்து “கண்டதும் காதலாக உருவான விஷயம்” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் பாணா காத்தாடி திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானார். இவர் நடிகர் விஜய்யுடன் மட்டும் கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இவர் நாகார்ஜுனாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தனது மார்க்கெட்டை சரியாமல் பார்த்துக் கொண்டு நடித்து வருகிறார். அதன்படி சமந்தாவின் இந்த ஆண்டின் முதல் பாதி வெற்றிகரமாக அமைந்திருக்கிறது. தெலுங்கில் வெளியான ரங்கஸ்தலம், மகாநடி, தமிழில் நடிகையர் திலகம் மற்றும் இரும்புத் திரை ஆகியப் படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

மேலும் சமந்தாவிற்கு வெளியாகவுள்ள திரைப்படங்கள் சீமராஜா மற்றும் யூ டர்ன். இவ்விருப்படங்களும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. இது சமந்தா ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது. மேலும் திருமணத்திற்கு பிறகு சமந்தா மற்றும் நாகசைத்தன்யா இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கான பூஜை சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

சமந்தா தன்னுடைய ரசிகர்களிடையே அடிக்கடி ட்விட்டர் பக்கத்தில் பேசி வருவார். தற்போது ரசிகர் ஒருவர் சமந்தாவின் போட்டோவை தனியாக போட்டோஷாப்பில் ஒர்க் செய்து திருமணம் செய்ததுபோல் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இதை ஒருவர் பகிர, இதற்கு சமந்தா, ‘இந்த விஷயம் கடந்த வாரம் நடந்தது. எப்படி இந்த போட்டோ லீக் ஆனது என்று தெரியவில்லை. இது கண்டதும் காதலாக உருவான விஷயம்’ என்று கூறியிருக்கிறார்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018