மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

பாவ மன்னிப்பு: தேசிய மகளிர் ஆணைய பரிந்துரை நிராகரிப்பு!

பாவ மன்னிப்பு: தேசிய மகளிர் ஆணைய பரிந்துரை நிராகரிப்பு!

கிருஸ்துவ தேவாலயங்களில் பாவ மன்னிப்பு கோரும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் எனத் தேசிய மகளிர் ஆணையம் அளித்த பரிந்துரையை தேசிய சிறுபான்மையினர் ஆணையம் நிராகரித்துள்ளது.

தேவாலயங்களில் மக்கள் தங்களுடைய தவறுகளை(பாவங்களை) பாதிரியார்களிடம் தெரிவித்து, அதற்குப் பாவ மன்னிப்பு கோரும் நடைமுறை வழக்கமாக இருந்துவருகிறது.

கேரள மாநிலத்தில் மலங்கார ஆர்த்தடாக்ஸ் சிரியன் தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கேட்க வந்த திருமணமான பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் செய்ததாக நான்கு பாதிரியார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைதொடர்ந்து, தேவாலயங்களில் பாவ மன்னிப்பு கோரும் பழக்கத்தால் பெண்கள் மிரட்டப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால், பாவ மன்னிப்பு கேட்கும் வழக்கத்தை ரத்து செய்யவேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா பரிந்துரைத்தார். ஆனால் இந்தப் பரிந்துரையை நிராகரிப்பதாகத் தேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சயீத் கயோருல் ஹசன் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "பாவ மன்னிப்பு கோருவது கிருஸ்துவ மத்தின் அடிப்படையான நம்பிக்கை. அதைத் தடைசெய்ய முடியாது. மத நம்பிக்கையில் எந்தத் தலையீடும் இருக்கமுடியாது தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரை மத்திய அரசின் நிலைப்பாடு இல்லை" எனக் கூறினார்.

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

2 நிமிட வாசிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

4 நிமிட வாசிப்பு

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

ஞாயிறு 29 ஜூலை 2018