மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

மதிய உணவுத் திட்டத்தில் பால்!

மதிய உணவுத் திட்டத்தில் பால்!

மதிய உணவுத் திட்டத்தில் பால் வழங்க பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகக் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத் துறை செயலாளர் தருண் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

இந்தியாவின் பால் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பால் விற்பனைக்கான போதிய சந்தை வாய்ப்பின்றி பால் விலை சரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பால் விலை குறைவாக இருப்பதும் இந்திய பால் ஏற்றுமதி வர்த்தகர்களைப் பாதிப்பதாக அமைந்துள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக பால் ஏற்றுமதிக்கான புதிய சந்தை வாய்ப்புகளைக் கண்டறியும் பணியில் இந்திய வர்த்தக அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் பால் விநியோகத்தை அதிகரிக்கும் விதமாகவும், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வசதிகள் கிடைக்கும் விதமாகவும் பள்ளிகளிலும், அங்கன் வாடிகளிலும் மதிய நேரத்தில் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்களுக்குப் பால் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்குக் கோரிக்கை வைத்திருந்தது. இந்தக் கோரிக்கையை பல்வேறு மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத் துறை செயலாளர் தருண் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பிடிஐ ஊடகத்திடம் பேசுகையில், “ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மதிய உணவுத் திட்டத்தில் பால் வழங்க ஒப்புதல் அளித்துள்ளன. இதற்கான லாஜிஸ்டிக் வசதிகள் மற்றும் இருப்பு வைப்பதற்கான வசதிகளை மாநில அரசுகள் செய்துகொண்டுள்ளன. தற்போது 2.30 லட்சம் டன்கள் பால் பவுடரும், 60,000 முதல் 70,000 டன் வரையிலான வெள்ளை வெண்ணெய்யும் (White Butter) கையிருப்பில் உள்ளன” என்றார்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018