மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

இதென்னய்யா பேனருக்கு வந்த சோதனை : அப்டேட் குமாரு

இதென்னய்யா பேனருக்கு வந்த சோதனை : அப்டேட் குமாரு

முன்னாடிலாம் பிறந்தநாளுக்கு எதுனா வாழ்த்து சொல்லணும்னா, ‘வாழும் பாரிவள்ளலே...’வுல ஆரம்பிச்சு ‘அடங்காத சிங்கமே...’ ‘அயராத புலியே’ன்னுதான் நோட்டீஸ், பேனர்லாம் அடிச்சு ஒட்டிக்கிட்டு இருந்தாங்க. இப்போ அந்தமாதிரி வாசகங்களுக்கு ஏதும் பஞ்சமான்னு தெரியல. அடிக்கிற பேனர்கள்ல ஃபுல்லா, ஆனா ஊனா ‘நாளைய முதல்வரே...’ ‘நாளை மறுநாளைய பிரதமரே...’ன்னு பேனர் அடிக்க ஆரம்பிச்சிடுறாங்க. இதுல ஒரு கொடுமை என்னன்னா, ‘நாளைய முதலமைச்சரே’ன்னு ஒரே வீட்டுல இருக்கும் மாமனாருக்கும் ஒருபக்கம் பேனர் அடிக்கிறாங்க, மருமகனுக்கும் இன்னொருபக்கம் பேனர் அடிக்கிறாங்க.

அதெப்படி ஒரே வீட்டுல இருந்து ஒரே போஸ்டிங்குக்கு ரெண்டுபேரு..? அட்லீஸ்ட், ஒரு துணை முதல்வர், மக்களின் முதல்வர் மாதிரியாவது பேனர் அடிக்கலாம்ல. ஹ்ம்ம்... என்னவோ போங்க...

அப்புறம் ஒரு விஷயம் நான் பொதுவாத்தான் சொன்னேன். இதைப்படிக்கிறபோது, தனுஷும் ரஜினியும் உங்க மைண்டுல வந்துபோனா அதுக்கு சங்கம் பொறுப்பேற்காதுங்க, பொறுப்பேற்காது. சரி வாங்க அப்டேட்டைப் பாக்கலாம்...

@Rahmath_Krish

திரும்ப கேட்க வேண்டிய அவசியம் வைக்காதவருக்கு மட்டுமே, கடன் கொடுப்பது சிறப்பு..

இல்லையெனில்,

'கடன் அன்பை முறிக்கும்'

கொஞ்சம், கொஞ்சமாக..

@saravananucfc

ரொம்ப ஓவரா ஆடாத அப்பறம் இருக்குற இடம் தெரியாம போய்டுவ

என்ற வாசகம் எனக்கு தானா??

இப்படிக்கு- மரம்

@mujib989898

யாரையாவது நம்பி தொலையுங்கள்

அவர் செய்வதை எல்லா வற்றையும் நம்பாமல் கொஞ்சம் சந்தேகம் வையுங்கள்

கேள்வி கேட்காதவர் வாழ்க்கை கிணற்று தவளை போலவே....

@saravananucfc

உலகத்திடம் அன்பை எதிர்பார்க்காமல் பிடித்த ஒருவரின் அன்பில் உலகை காணலாம்.

@iamnila

நினைவு பயணங்களில் அவள்தான் ஓட்டுநர்

@mujib989898

வேடிக்கை அதிகம் பார்ப்பதே

கவனக்குறைவு..

@samester_twitz

அழகானதை மட்டும்

ரசிப்பதில் இல்லை

வாழ்க்கை

நாம் ரசிப்பதை எல்லாம்

அழகாக்குவதில்

இருக்கிறது...!

@Aaathithamizhan

ஏழைக் கூலித் தொழிலாளிகள்

ஞாயிறு நான்வெட்ஜை

சாப்பிட வேண்டுமா

வேண்டாமா என்பதை

சனிக்கிழமை

கூலி கொடுக்கும் முதலாளிகள்

முடிவு செய்கிறார்கள்

@sultan_Twitz

மானா மதுரையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் நாற்காலிகள் வீச்சு - செய்தி #

இதுக்கு தான் சேர் அதிகமா வாங்காதீங்கன்னு சொன்னா கேட்டாதான!!

@kathir_twits

தவறாக முடிவு எடுத்து விட்டு அதை மாற்றி கொள்ள மனம் இல்லாமல் அதை மெய்ப்பிக்கும் முயற்சியில் பல பிரச்சனைகளை உருவாக்கி விடுகிறார்கள்

சுய கவுரவவாசிகள் !!

@Thiyagu_Twits

ஒரு "கரண்டி " மாவுதான்...

இட்லியும் தோசையும்.... ஆனா விலையும் வேலையும் வேற மாதிரி....

@rajamst98

வானம் ஓர் காதல் காவியம் என்றால்,

அதில் சொல்லிய காதல் ஒற்றை நிலவாகவும்...

சொல்லாத காதல் பல நட்சத்திரங்களாகவும் உள்ளது..

@ArunkumarTNR

செய்தி : நவீன பீரங்கிகள், என்ஜின்கள் ராணுவத்தில் சேர்ப்பு - நிர்மலா சீதாராமன்

ஓபிஎஸ்க்கு உள்ளூரில் ஏதாவது பிரச்சனை என்றால் அதை வாடகைக்கு கேட்பார் அதையும் கொடுங்க பாதுகாப்பு அமைச்சரே.

@BlackLightOfl

பரிதாபத்திற்குரிய ஜீவன்கள் வரிசையில் வீட்டு கஷ்டம் போக்க நல்ல வேலை வேண்டி எஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.!!

@mujib989898

காட்டும் அன்புக்கு அளவு தேவையில்லை

எதிர்பார்க்கையில் தான் பலர் தடுமாறி விடுகிறார்கள்...

- லாக் ஆஃப்!

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018