மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

நீதிபதிகள் நியமனம் தாமதம் கூடாது: உச்ச நீதிமன்றம்!

நீதிபதிகள் நியமனம் தாமதம் கூடாது: உச்ச நீதிமன்றம்!

நீதிபதி பதவிகளை தாமதமின்றி நிரப்பிட வேண்டும் என்று மத்திய அரசை உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளியன்று நிகழச்சி ஒன்றில் பேசிய நீதிபதி குரியன் ஜோசப் கூறியதாவது:

கொலீஜியம் நீதிபதி பதவிகளுக்கு அளித்த பரிந்துரைகளை உடனடியாக தாமதமின்றி அமல்படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி நியமனங்களுக்கான பரிந்துரைகளை அனுப்பினால் அல்லது உயர் நீதிமன்றத்தின் கொலீஜியம் தனது பரிந்துரையை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பினால் மூன்று மாதங்களுக்குள் அந்த பதவிகள் நிரப்பப்பட வேண்டும்.

மேலும். உச்ச நீதிமன்றத்தைப் பொருத்தவரை, அங்கு நீதிபதிகள் நியமனமானது 2 வாரத்திற்கு மேல் தாமதமாகக்கூடாது. உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற நீதிபதி கேஎம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரைத்து 3 மாதங்களாகி விட்டது. ஆனால் இன்னும் அவர் நியமிக்கப்படவில்லை. மறுபடியும் உச்ச நீதிமன்றம் தனது பரிந்துரையை உறுதி செய்தது. ஆனாலும் இன்னும் அவருக்கு பதவி அளிக்கப்படாதது வருத்தமளிக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி ஒய்வு வயது 70 வரை நீட்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நீதிபதி குரியன் ஜோசப்பும் மற்ற 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள். இணைந்து கடந்த ஜனவரி 12இல் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் செயல்படும் நீதிமன்றத்தின் செயல்பாடுகளை விமர்சித்து ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர். அது நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018