மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

மனித வளர்ச்சியின்றி பொருளாதாரம் வளராது!

மனித வளர்ச்சியின்றி பொருளாதாரம் வளராது!

இந்தியப் பொருளாதாரம் 10 விழுக்காடு வளர்ச்சியை எட்ட வேண்டுமென்றால், மனிதவளக் குறியீடு மேம்படுத்தப்பட வேண்டும் என்று நிதி ஆயோக்கின் தலைமைச் செயலதிகாரியான அமிதாப் காந்த் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஜூலை 27ஆம் தேதியன்று குழந்தைகள் உரிமை அமைப்பான ‘பிளான் இந்தியா’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் அமிதாப் காந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நாம் (இந்தியா) இப்போது சுமார் 7.5 விழுக்காடு வேகத்தில் வளர்ந்து வருகிறோம். அடுத்த முப்பது ஆண்டுக் காலத்தில் 10 விழுக்காடு போன்ற உயர் விகிதங்களில் நாம் வளர்ச்சியடைய வேண்டுமென்றால், இந்தியாவுக்கான மனிதவளக் குறியீட்டை மேம்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாவிடில் வளர்ச்சி சாத்தியமில்லை” என்று கூறினார்.

குழந்தை இறப்பு விகிதம், மகப்பேறு கால இறப்பு விகிதம் போன்றவை மிக உயர்வாக உள்ளன. மேலும், மூன்றில் ஒரு குழந்தை வளர்ச்சி குன்றிப் பிறக்கிறது. இந்தச் சூழல் நீடித்தால் நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை என்று அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டில் ஐநா வெளியிட்ட மனித மேம்பாட்டு அறிக்கையில், 188 நாடுகள் அடங்கிய மனிதவளக் குறியீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா 131ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018