மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

யானைகள் நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை!

யானைகள் நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் காரணமாக, வாகனங்களை பாதுகாப்பாக இயக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது, பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் அவற்றை உண்ணுவதற்காக மேட்டுப்பாளையம், கல்லார், சிறுமுகை போன்ற பகுதியிலிருந்து அவை படை எடுக்க தொடங்கியுள்ளன. இதனால், அவற்றை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள நடைபாதையில் நடந்து செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வனக்குழுவினர் 3 பிரிவாக காட்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை தொடர்ந்து, காட்டு யானைகளுடன் புகைப்பட எடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனத்தை இயக்கவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018