மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

ஷெல் நிறுவனங்களைக் கட்டுப்படுத்திய அரசு!

ஷெல் நிறுவனங்களைக் கட்டுப்படுத்திய அரசு!

இந்தியாவில் 66 விழுக்காடு நிறுவனங்கள் மட்டும்தான் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் என்று பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

இதுகுறித்து இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘ஜூன் மாத இறுதிக் கணக்கின்படி இந்தியாவில் 17.79 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாகும். ஆனால் இப்போது பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 66 விழுக்காடு நிறுவனங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் செயல்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை ஜூன் மாத இறுதியின்படி 11.89 லட்சமாக மட்டுமே உள்ளது. இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களில் 5.43 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி 1,390 நிறுவனங்கள் செயலற்றுவிட்டன, 38,858 நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளன. 103 நிறுவனங்கள் மீண்டும் செயல்படுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. 6,117 நிறுவனங்கள் இணைப்புக்காகக் காத்திருக்கின்றன. இதில் 3.7 லட்சம் நிறுவனங்கள் தொழில் சேவை நிறுவனங்களாகும். 2.36 லட்சம் நிறுவனங்கள் உற்பத்தி நிறுவனங்களாகும்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018