மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

கமல் பட நடிகையின் மகள் தற்கொலை!

கமல் பட நடிகையின் மகள் தற்கொலை!

சில விடயங்களுக்குத் தற்கொலை தீர்வு கிடையாது என நாம் யோசிக்கின்றோம் . தற்கொலை தான் தீர்வு எனத் தற்கொலை செய்துகொள்வோர் யோசிக்கின்றனர் . ஹேராம் திரைப்பட நடிகையான அன்னபூர்ணா-வின் மகள் தூக்கு போட்டு மரணித்து இருப்பதும் இப்படியான இரு சூழ்நிலையில் தான்.

ஏராளமான தெலுங்கு படங்களில், குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் அன்னபூர்ணா. இவருக்குக் குழந்தை கிடையாது. குழந்தை இல்லாததால் மனமுடைந்து இருந்தவரின் வாழ்க்கையை அழகாக்கியவர் அவர் தத்தெடுத்த மகள் கீர்த்தி . கீர்த்தியை நன்றாக வளர்த்த அன்னபூர்ணா அன்பையும் அவர் மீதே கொட்டியிருந்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த வெங்கடகிருஷ்ணா என்ற சாப்ட்வேர் என்ஜினியரை திருமணம் செய்துகொடுத்திருக்கிறார் அன்னபூர்ணா. ஹைதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் தனது கணவருடன் வசித்து வந்தார் கீர்த்தி. அவர்களுக்குக் குழந்தை இல்லை. மன ரீதியாகக் கடந்த 6மாதங்களாகப் பாதிப்படைந்திருந்த கீர்த்தி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தக் காரணத்தால் தூக்கமின்மை, மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார். கீர்த்திக்கு சரியான முறையில் பேச்சு வராது என்பதும் இந்தத் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

2 நிமிட வாசிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

4 நிமிட வாசிப்பு

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

ஞாயிறு 29 ஜூலை 2018