மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

சொத்து வரி: சுய மதிப்பீட்டு அறிக்கையைத் தாக்கல் செய்ய காலக்கெடு!

சொத்து வரி: சுய மதிப்பீட்டு அறிக்கையைத் தாக்கல் செய்ய காலக்கெடு!

சொத்து வரி உயர்த்தப்படுவதை முன்னிட்டு தங்கள் கட்டடத்தின் சுய மதிப்பீடு விவர அறிக்கையை ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 1998இல் இருந்து சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்தது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் சொத்து வரியை 100 சதவீதம் உயர்த்த அரசு உத்தரவிட்டது. கடந்த 23ஆம் தேதியன்று மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதமும், குடியிருப்பல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதம் வரை வரியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

பின்னர் சொத்து வரி உயர்த்தியது தொடர்பாகப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தமிழக அரசின் அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டு, வாடகை வீட்டுக்கான வரி உயர்வை 100 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் குறைத்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவிப்பதாவது, " 2018-19ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018