மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

பொறியியலுக்கும் நீட் தேர்வை திணிக்கக் கூடாது!

பொறியியலுக்கும் நீட் தேர்வை திணிக்கக் கூடாது!

பொறியியல் படிப்புக்கு நீட் தேர்வை நடத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு தழுவிய அளவில் பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு நடத்தும் திட்டம் கைவிடப்படவில்லை என்றும், இதுதொடர்பாக மாநில அரசுகளை வலியுறுத்தப் போவதாகவும் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே கூறியிருந்தார்.

இதனை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டு இன்று (ஜுலை 29) அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை நிரந்தரமாக்கி விட்ட மத்திய அரசு, அடுத்தக்கட்டமாக பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வைத் திணிக்கத் துடிக்கிறது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டால், அது சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின்படிதான் நடத்தப்படும். இது மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளின் பொறியியல் கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ், “மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வு மூலம் தான் நடைபெறுகிறது. இதில் சேரும் தமிழகப் பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு ஆகும்” என்றும் தெரிவித்துள்ளார்.

”தமிழகத்தில் அடுத்த ஆண்டு 12-ஆம் வகுப்புக்கு புதியப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் போதிலும், புதிய பாடங்களை நடத்த ஆசிரியர்கள் திணறும் நிலையில், பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டால், முன்னணி பொறியியல் கல்லூரிகளில் உள்ளூர் மாணவர்களுக்கு இடம் கிடைக்காது” என்று கூறிய ராமதாஸ், முடிந்த அளவுக்கு நீட் தேர்வை எதிர்க்கிறோம். மத்திய அரசுடன் கடுமையாக வாதிடுகிறோம். கடைசியில் வேறு வழியின்றி நடத்தத் தான் வேண்டியிருக்கிறது’’ என்று முதல்வர் நேற்று சேலத்தில் கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

2 நிமிட வாசிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

4 நிமிட வாசிப்பு

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

ஞாயிறு 29 ஜூலை 2018