மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி!

தமிழ் சினிமாவில் வருடந்தோறும் ரூபாய் 750 கோடி வரை புதிய படங்களின் தயாரிப்புக்காக முதலீடு செய்யப்படுகிறது. படங்களை தயாரிக்க காட்டுகிற வேகம், ஆர்வ கோளாறு செய்த முதலீட்டை லாபத்துடன் எப்படி எடுப்பது என்பதில் இருப்பதில்லை. உலக தரம் என பூஜை முதல் ரீலீஸ் வரை உரக்க பேசும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வளர்ந்து விட்ட தொழில்நுட்ப வளர்ச்சியில் தங்கள் படங்களை திருட்டுதனமாக களவாடப்படுவதை தடுப்பதற்கு இன்று வரை எந்த முயற்சியும் அரசாங்கத்துடன் இணைந்து எடுக்கவில்லை.

புதிய படங்களை திருட்டுத்தனமாக பிரதி எடுக்கும் மையங்களாகத் திரையரங்குகள் இருக்கின்றன என்பது தயாரிப்பாளர்களால் நீண்ட காலமாக கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டு . இதற்கு உடந்தையாக திரைத்துறையினரும் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது. அவ்வாறு புதிய படங்களை திருட்டுத்தனமாக பிரதி எடுத்த தியேட்டர்கள் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. வெளி ஆட்கள் வீடியோ கேமரா மூலம் படம் பிடித்ததை கையும் களவுமாக காவல் துறையில் பிடித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் சில தினங்கள் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பரபரப்பான செய்திகளாக பயன்பட்டது.

நிரந்தர தீர்வுக்கான முன் முயற்சிகள் எட்டாக் கனியாக இன்று வரை உள்ளது. காரணம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் படத்தை விற்பனை செய்து விடுவதால் திருட்டு வீடியோவைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. நல்ல படங்களின் வெற்றி திருட்டு DVD-லால் பாதிக்கப் படுவதில்லை.

இது குறித்து தற்போது தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தயாரிப்பாளர்களின் உரிமையை சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் திருட்டுக் கும்பலுக்கு(Video piracy) ஆதரவாகச் செயல் பட்டு ஆதாரத்துடன் கண்டுபிடிப்பட்ட கீழ்க்குறிப்பிட்ட திரையரங்குகளுக்கு, வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகும் புதிய படங்களை திரையிட, அனுமதி வழங்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என்று.

1.கிருஷ்ணகிரி முருகன்

(மனுசனா நீ)

2.மயிலாடுதுறை கோமதி

(ஒரு குப்பைக் கதை)

3.கரூர்- எல்லோரா

(ஒரு குப்பைக் கதை)

4.கிருஷ்ணகிரி நயன்தாரா

(கோலிசோடா-2 )

மேலும், “சட்ட விரோத செயல்களுக்கு எதிராக நாம் அனைவரும் உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப் படுகிறது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

2 நிமிட வாசிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

4 நிமிட வாசிப்பு

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

ஞாயிறு 29 ஜூலை 2018