மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

தா.பா.வை நலம் விசாரித்த ஸ்டாலின்!

தா.பா.வை நலம் விசாரித்த ஸ்டாலின்!

உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் த.பாண்டியனை அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ் மாநில செயலாளரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான தா. பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று ஜூலை 28 அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிபிஐ மாநில செயலாளர் ஆர். முத்தரசன் நேற்று ராஜிவ்காந்தி மருத்துவமனைக்குச் சென்று தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், தா.பாண்டியனுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தற்போது அவர் உடல் நிலையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என மருத்துவர்கள் கூறியதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை ராஜிவ்காந்தி மருத்துவமனைக்குச் சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தா.பாண்டியனை சந்தித்து அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். பொன்முடி, சேகர் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோல், மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், மூச்சுத் திணறல் காரணமாக தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ. பெருமாள், ஏ. ஆறுமுகநயினார் ஆகியோரும் தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்தனர்.

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

2 நிமிட வாசிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

4 நிமிட வாசிப்பு

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

ஞாயிறு 29 ஜூலை 2018