மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

இணைய உலகை அச்சுறுத்தும் `ஃபைல் லெஸ்' அட்டாக்!

இணைய உலகை அச்சுறுத்தும் `ஃபைல் லெஸ்' அட்டாக்!

`ஃபைல் லெஸ்' அட்டாக் மூலம் இந்த ஆண்டு இணையதள மோசடிகள் அதிகரித்து வருவதாக இணையதள பாதுகாப்பில் முன்னணி நிறுவனமான மெக்கஃபே (McAfee ) நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய இணையப் பாதுகாப்பு நிறுவனமான மெக்கஃபே, சமீபத்தில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கணினிகளில் உள்ள மென்பொருள் மற்றும் அதில் உள்ள தகவல்களுக்கு தீங்கிழைக்கும் `ஃபைல் லெஸ்' அட்டாக் என்னும் இணையத் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இது பயனர்களின் கணினியில் எந்தொரு வைரஸையும் உட்செலுத்துவதில்லை. அதற்கு பதிலாக கணினியில் பயன்பாட்டில் இருந்துகொண்டிருக்கும் மென்பொருள் அல்லது மெமரியில் `simple scripts' போன்ற எளிய ப்ரோகிராமை உட்செலுத்திவிடும். இதனைக் கண்டறிவது மிகவும் கடினமானது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெக்கஃபே (McAfee ) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு `ஃபைல் லெஸ்' அச்சுறுத்தல் மற்றும் CactusTorchஆனது, கணினியில் இருக்கும் 'DotNetToJScript' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தீங்கிழைக்கும் ப்ரோகிராமை கணினிக்குள் செலுத்திவிடும். இது கணினியின் மெமரியில் இருந்து வேலைசெய்யும். விண்டோஸ் இயங்குதளத்தில் `shellcode' ஐ பயன்படுத்தும் CactusTorch-ன் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்து வருகிறது" இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதில் பயனர்கள் மட்டுமின்றி பெருநிறுவனங்களும் பாதிக்கப்படுகின்றனர். பெருநிறுவனங்களில் இந்த வெக்டரைப் பயன்படுத்தி ஹேக்கர்கள், படிப்படியாக ஒவ்வொரு நெட்வொர்க்காக பரவலாகக் கொண்டு செல்கின்றனர். இவை, விண்டோஸ் மென்பொருளுக்கும், இணையப் பாதுகாப்பு நிறுவங்களுக்குமான நம்பிக்கை காரணிகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாக மெக்கஃபே குற்றம் சாட்டியுள்ளது.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018