மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

மகளுக்கு அஞ்சலியாக ஏழை மாணவிகளுக்கு பள்ளிக் கட்டணம்!

மகளுக்கு  அஞ்சலியாக ஏழை மாணவிகளுக்கு பள்ளிக் கட்டணம்!

தன்னுடைய இறந்த மகளின் நினைவாக தான் பணியாற்றி வரும் பள்ளியில் உள்ள 45 ஏழை மாணவிகளின் பள்ளிக் கட்டணத்தை செலுத்தி வருகிறார் அரசு ஊழியர் ஒருவர்.

கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பசவராஜ். இவர், மக்டம்புரா பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கிளர்க்காகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவருடைய மகள் அண்மையில் உயிரிழந்துள்ளார். மகளை இழந்த சோகத்திலிருந்து மீள முடியாமல் மிகவும் தவித்து வந்திருக்கிறார் பசவராஜ். அப்போது, மனவேதனையில் வாடிய அவர், மகளின் நினைவாக தனது பள்ளியில் படிக்கும் ஏழை மாணவிகளின் கல்வி கட்டணச் செலவை ஏற்றுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறார். இவருடைய இந்த மனிதாபிமான செயலுக்கு அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து பசவராஜ் கூறுகையில், "எனது பள்ளியில் படிக்கும் ஏழை மாணவிகளின் கல்விக் கட்டணச் செலவை, இந்த ஆண்டுமுதல், ஏற்றுக் கட்டலாம் என முடிவு செய்துள்ளேன். இதனை என் மகளுக்கு நான் செய்யும் கடமையாகக் கருதுகிறேன்" என்றார்.

பசவராஜிடம் இருந்து உதவி பெற்ற பள்ளி மாணவி பாத்திமா கூறுகையில், “ஏழை குடும்பத்தைச் சேர்ந்த எங்களால்,கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாமல் சிரமப்பட்டோம். பொருளாதாரரீதியாக பின் தங்கிய குடும்பச் சூழலில் இருந்து வரும்என்னைப் போன்றவர்களுக்கு, கல்விக்கட்டணத்தை செலுத்தி படிப்பைத் தொடர உதவியுள்ளார். அவரின் மகளின் ஆத்மா சாந்தி அடைய நாங்கள் இறைவனிடம் வேண்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018