மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

மருத்துவம்: அதிகம் செலவழிக்கும் மெட்ரோவாசிகள்!

மருத்துவம்: அதிகம் செலவழிக்கும் மெட்ரோவாசிகள்!

இந்திய மெட்ரோ நகரங்களில் வாழும் மக்கள் மருத்துவமனைகளில் புறநோயாளிகளாகச் செலவிடும் தொகை இரட்டிப்பாக உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.

இதுகுறித்து ரெட்சீர் கன்சல்ட்டிங் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “இந்தியாவின் முதல்தர நகரங்களைவிட மெட்ரோ நகரங்களில் மருத்துவமனைக்கு புறநோயாளிகள் செலவிடும் தொகை ஆண்டுக்கு இரு மடங்காக உள்ளது. முதல்தர நகரங்களில் வாழும் குடும்பம் ஒன்று புறநோயாளிகளாக மருத்துவம் பார்க்க ஆண்டுக்கு ரூ.14,500 செலவிட்டால், மெட்ரோ நகரங்களில் வாழும் குடும்பம் ஒன்றுக்கான இதே செலவு ரூ.30,500 ஆக உள்ளது.

மெட்ரோ நகரங்களில் வாழும் மக்கள் புற நோயாளிகளாகச் செலவிடுவதில் 40 விழுக்காடு மருந்துகளுக்கும், 37 விழுக்காடு மருத்துவரின் ஆலோசனைக்கும், 23 விழுக்காடு நோயைக் கண்டறியவும் செலவிடுகின்றனர். நோயைக் கண்டறிவதற்கான சோதனைகள் மெட்ரோ நகரங்களைக் காட்டிலும், முதல்தர நகரங்களில் குறைவான செலவில் கிடைக்கிறது. நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் முதல்தர நகரங்களைக் காட்டிலும், மெட்ரோ நகரங்களில் அதிகமாகக் காணப்படுகின்றனர்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018